பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 நீங்காத நினைவுகள் அம்மையார் இதனை எதிர்த்துப் பல்கலைக்கழகத்திற்கு எழுதினார். தவற்றினை உணர்ந்தது பல்கலைக்கழகம் மீண்டும் ஒரு குழு அமைத்துப் புதிதாகப் பேட்டியும் ஏற்படுத்தியது. தவறுதலைச் சுட்டிக்காட்டிய அம்மையாருக்கும் இப்பதவி கிடைத்தது. டாக்டர் சகந்நாத ரெட்டி தவறுதலுக்கு வருந்தியிருக்க வேண்டும். 3 வரலாற்றுத் துறை : இத்துறையில் பணியாற்றிய டாக்டர் V.M. ரெட்டிக்கு ஒன்பதரை யாண்டுகள்தாம் எம்.ஏ.க்குக் கற்பித்த அநுபவம் இருந்தது. வல்லுநர் குழு இவரைப் பேராசிரியராகத் தேர்ந்தெடுத்தது. ஆனால் ஆறு திங்கள் கழித்துதான் அதாவது பத்தாண்டுகள் அனுபவம் பெற்ற பிறகுதான் இவருக்குப் பேராசிரியர் பதவிக்கு ஆணை அனுப்பப் பெற வேண்டும் என்பது குழுவின் குறிப்பு. ஆனால் ஆட்சிக்குழு இத்தீர்மானத்தைச் செல்லும்படியாக்க வில்லை. திரும்பவும் விளம்பரம் செய்து இப்பதவி நிரப்பப் பெற வேண்டும் என்ற குறிப்பையும் தந்தது. டாக்டர் ஜகந்நாத ரெட்டி இவருக்குப் பேட்டியே தந்திருக்கக் கூடாது. என் நியமனத்தில் பேட்டிக்குக் கடிதம் அனுப்பாமல் அல்லவா தொல்லை கொடுத்தார்? திரும்பவும் விளம்பரம் செய்யப்பெற்றபோது திரு. V.M. ரெட்டி விண்ணப்பித்துப் பதவியையும் பெற்றார். (4) இந்தித் துறை : இந்தத் துறையில் விரிவுரையாளர் நியமனத்திற்குத் தில்லிப் பல்கலைக்கழகத்திலிருந்து ஒருவர் குழுவில் இடம்பெற்றிருந்தார். பொருத்தமில்லாத ஒருவருக்கு நியமனம் தரவேண்டுமென்று டாக்டர் ரெட்டி வற்புறுத்தினார். இது அமைச்சர் ஒருவரின் பரிந்துரை என்றும் குறிப்பிட்டார். உறுப்பினர் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. தீர்மானத்தில் மறுப்புக் குறிப்பு வைப்பதாகக் கூறவே, ஒருவரையும் குழு நியமிக்கவில்லை. மீண்டும் விளம்பரம் செய்து தில்லிப் பேராசிரியரைக் குழுவில் இல்லாமல் செய்து டாக்டர் ரெட்டி நினைத்தவருக்கே பதவி வழங்கினார். இதுவும் வல்லான் வகுத்த வாய்க்காலாயிற்று. 15 வணிகத்துறை : இத்துறையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தவர் டாக்டர் ஒ.ஆர். கிருட்டினசாமி என்பவர்.