பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ). ஜகந்நாத ரெட்டி - 311 இவருக்குப் பத்தாண்டுகட்கு மேல் எம்.ஏ. கற்பித்த அநுபவம் இருந்தது. சில ஆண்டுகள் கல்லூரி முதல்வராகவும் இருந்தவர். பேராசிரியர் பதவிக்கு வந்த இவரை மடக்கி இரண்டாண்டுகள் பல்கலைக்கழக அநுபவமாவது இருக்கவேண்டும் என்று கூறித் துணைப் பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் நியமனம் செய்தார் துணைவேந்தர். அவரும் இரண்டாண்டுகள் நிறைவு செய்வதற்கு முன்னர்ப் பெங்களுர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் "டீன்" (Dean) ஆகவும் நியமனம் பெற்று வெளியேறிவிட்டார். புள்ளியியல் துறையையும் இவர் விட்டு வைக்கவில்லை. இதில் துன்பப்பட்டவர் டாக்டர் M.P. சாஸ்திரி என்பார். (6) விலங்கியல் துறை : இத்துறையில் இவர் மேற்கொண்ட முறை அடாதது. இத்துறையில் நல்ல அநுபவம் பெற்ற டாக்டர் K.S. சுவாமிக்கும் துணைப் பேராசிரியர் பதவி உயர்வு தரவில்லை. ஆனால் அவரை அப்படியே வைத்திருந்து பிறகு பதவி உயர்வு தந்திருக்கலாம். ஆனால் அவருக்கு மேல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஒய்வு பெற்ற டாக்டர் கிருஷ்ணன் என்பவரைப் பேராசிரியராகக் (இரண்டாண்டு ஒப்பந்தத்தில் கொணர்ந்தது துறையிலுள்ளார் அனைவருக்குமே வயிற்றெரிச்சலை விளைவிப்பதாக இருந்தது. இந்த எதிர்ப்புச் சூழ்நிலையில் கிருஷ்ணனால் என்ன் சாதித்திருக்க முடியும்? உளவியல் துறையில் டாக்டர் நாராயணராவை துறைத்தலைவராக வைத்திருந்தது போலவே டாக்டர் சுவாமியையும் வைத்திருந்திருக்கலாம். இப்படி டாக்டர் ரெட்டியின் தனிமுரண்பாடு (Idiosyncrsy) பல்வேறு விதமாகச் செயற்பட்டு ஆசிரியர்களின் வெறுப்புக்குள்ளானார். - 25 டாக்டர் சுவாமி இன்று இல்லை ஐந்தாண்டுகட்கு முன்னரே 1988 தற்கொலை செய்து கொண்டதாக செய்தித்தாள்களின் வாயிலாக அறிந்தேன். இங்ங்னமே பல்லாண்டுகட்கு முன்னர் விலங்கியல் பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றிய டாக்டர் பம்பாதிராவ் வேறு பல்கலைக்கழகத்திற்குச் சென்று அங்கு டாக்டர் சுவாமியைப் போலவே தற்கொலை செய்து கொண்டதாக அறிகின்றேன்.