பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் D. ஜகந்நாத ரெட்டி 3.13 நோக்கில் செய்வதில்லை. இவர்கள் காலத்தில் நடைபெற்ற நிர்வாகம் போல் இவர்கட்குப் பின்னர் இன்றளவும் ஒரு நிர்வாகம் அமையவில்லை. இப்பொழுது ஒழுங்கு முறை உண்டா? என்பதே ஒரு கேள்விக்குறியாகி விட்டது. நினைவு 18 : பெரிய பதவியிலிருப்பவர்கள். ஆணவத்தால் தவறான முடிவு எடுக்கும்பொழுது குழப்பமும் கொந்தளிப்பும் எழும். துன்பப்படுபவர்கள் போர்க்கொடி எழுப்புவார்கள். இன்று கல்விக் கூடங்களில் ஏற்படும் குழப்பத்திற்கு உயர்பதவியில் இருப்பவர்கள் எடுக்கும் தவறான முடிவுகளே காரணமாகும். மாணவர்கள் மன முதிர்ச்சியின்மையால் சில செயல்களைப் புரிந்தாலும் அவர்களிடம் பரிவுடன் பேசி அவர்களைத் திருத்தலாம்; அவர்களை ஐயக்கண் கொண்டு பார்த்தல் ஆகாது. அவர்களை அணுகுவதில் தந்தை. தனயன் பாசம் வேண்டும். ஒரு சமயம் தேர்தல்காலத்தில் (பெரும்பாலானவர்கள் தேர்வு பிரசாரத்திற்கும். தேர்வு வேலைக்கும் போயிருந்தமையால் மாணவர்கள் தேர்வுகளை ஒரு மாதம் தள்ளி வைக்கும்படிப் பல்கலைக்கழகத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்கள். துணைவேந்தர் டாக்டர் ரெட்டி பரிவுடன்தான் செயற்பட்டார். ஆட்சிக்குழு கூட்டத்தில் வைத்து தேர்வை மூன்று வாரம் தள்ளிவைக்க அனுமதி பெற்றார். கூட்டம் முடிந்து துணைவேந்தர் அறைக்குத் திரும்பியதும் பத்துப்பன்னிரண்டு மாணவர்கள் துணைவேந்தரைப் பார்த்து முடிவு தெரிந்து கொள்ளக் காத்திருந்தனர். அவரையும் பார்த்தனர். "நான் ஆட்சிக் குழுவினரைச் சரிப்படுத்தி உங்கள் கோரிக்கையை நிறைவேறச் செய்தேன். நீங்கள் கவலைப்பட வேண்டா. அறைக்குத் திரும்பி நன்றாக படியுங்கள். மாணவர்கட்குத் தானே பல்கலைக்கழகம் உள்ளது? என்னால் இயன்றவரை உங்கட்கு வேண்டிய நன்மைகளைச் செய்வேன்" என்று அன்பாகப் பேசி ஆறுதல் கூறி அனுப்பியிருக்கலாம் அப்படிச் செய்யவில்லை. காவல்துறை அதிகாரிபோல் செயற்பட்டார். சீறினார். சினந்தார். கண்ணோட்டம் சிறிதுமின்றி நடந்து கொண்டார். "தன்னைத்தான் 9