பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் D. ஜகந்நாத ரெட்டி - 317 துணைவேந்தர் முதல்வரைக் கேட்க (அப்போது முதல்வராக இருந்தவர் ஆங்கிலப் பேராசிரியர் M.V. இராமசர்மா) அவரும் அவ்வாறே பரிந்துரைத்தாராம். அங்ங்ணமே தேர்வு-ஆணைய அதிகாரி M. குடும்பராவ் என்பாரையும் தற்காலிகப் பதவி நீக்கத்திற்கு குறிவைத்தார் துணைவேந்தர். இச்செய்தி எப்படியோ வெளிப்பட்டுக் கல்வி அமைச்சர் M.V. கிருஷ்ணராவ் காதிற்கு எட்ட அவர் அரசியல் சார்பாகவுள்ள ஆட்சிக் குழுவினர்களின் காதைக் கடித்து அனுப்பினார். திரு குடும்பராவ் M.V. கிருஷ்ணராவின் உறவினர் மிகவும் வேண்டியவர். இதனால் அவர் காக்கப்பெற்றார். இவர் காரணமாக அனைவரும் காக்கப்பெற்றனர். "நல்லார் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்பது போலாயிற்று நிலைமை. ஆட்சிக்குழு கூட்டத்தில் நடைபெற்றது என்ன? அரசு சார்பாக வந்த ஓர் உறுப்பினர் "பதவியிலிருந்து விலகிப்போகும் துணைவேந்தருக்கு அதுவும் அவர் கலந்து கொள்ளும் இறுதிக் கூட்டத்தில், இத்தகைய தீங்கு விளைவிக்கும் செயல் எதற்கு? புதிய துணைவேந்தர் இந்த விஷயத்தைக் கவனித்துக் கொள்வார். இந்தக் கூட்டத்தில் நிகழ்ச்சி நிரலிலுள்ள எந்தப் பொருளைப்பற்றியும் தீர்மானிக்க வேண்டா, ஆறு ஆண்டுகளாகப் பல்கலைக்கழகத்தை நன்முறையில் நடத்திய துணைவேந்தருக்கு நன்றி செலுத்தி சிற்றுண்டி விருந்துடன் கூட்டத்தை முடித்துக் கொள்வோம்" என்று கூறியதால் கூட்டம் நிறைவு பெற்றதாம். திருமதி இந்திரா காந்தி நாட்டின் ஒழுங்குமுறைக்காகக் கொண்டுவந்த அவசரகால நிலைமையைப் பல்வேறு துறைகளில் மேல்மட்டத்தில் பணியாற்றியவர்கள் இத்திட்டத்தையே குலைத்து அந்த அம்மையாருக்கு அழியாப் பழியைத் தேடித்தந்தனர். சர்க்காரியா கமிஷனும் தோன்றியது. நாட்டின் செல்வம் சர்க்காரிய கமிஷனால் வீணாகக் கரைந்தது. ஏதோ திருப்பதியில் பணியாற்றிய காரணத்தால் டாக்டர் ஜகந்நாத ரெட்டியை ஏழுமலையான் தடுத்து நிறுத்தி அவரைக் காத்தான். அவசர நிலையில் கயவர்களின் கைங்கரியத்திற்குப் பலியாகிச் சொல்லொணாத் துயரத்தை