பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ேW.C.T.V. வேங்கடாசலம் செட்டியார் {{5 - நினைவு 2 வள்ளல் அழகப்டர் சிவப்பேறு அடைந்ததும் (ஏப்பிரல் 1957 கல்லூரி நிதிநிலை சீர்கேடடைந்தது. ஆசிரியர்கட்கும். இதர ஊழியர்கட்கும் மாத ஊதியம் தரும் நிலையை அது தொட்டது. உடனே எல்லாக் கல்லூரி தளவாடங்கள். அறிவியல் ஆய்வுலகச் சாமான்கள். பொறியியல் கல்லூரித் தளவாடங்கள், பொறியியல் கல்லூரியைச் சார்ந்த இயந்திரச் சாதனங்கள் முதலியவற்றை யு.கோ. வங்கியில் பத்து இலட்சத்திற்கு அடகு வைத்துத் தற்காலிகமாக நிலையைச் சமாளித்தார். "உழைத்து மாதக் கடைசியில்தானே ஊதியத்தை எதிர்பார்க்கின்றனர் ஆசிரியர்கள்? ஊதியத்தையே நம்பி வாழ்கின்றவர்களின் குடும்பம் எப்படி நடைபெறும்? மன அமைதியற்றுப் போனால் எப்படி அவர்கள் திறமையாகப் பணியாற்ற இயலும்?" என்றெல்லாம் சிந்தித்து இந்த முடிவு எடுத்தார். கம்பெனிகட்குத் தரவேண்டிய பாக்கியைச் சற்றுத் தள்ளிப் போடலாம் என்று கருதினார். இத்தகைய பொருளாதார சாணக்கியம் இவரைத் தவிர எவர் மனத்தில் உதிக்கும்? கூட்டத்தில் பேசும்போது நான் Ingol–(pɛngɔL GLTGETTšng Guéogspéir" (i am a practical expert in economics) என்று சொல்லிக் கேட்போரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவார். இவருடைய பொருளாதார நிபுணத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக இன்னொரு நிகழ்ச்சி நினைவிற்கு வருகின்றது. 1960 ஆகஸ்டு முதல் திருப்பதியில் பணியேற்றாலும் 1966 மே மாதம் வரையில் என் குடும்பம் காரைக்குடியில்தான் இருந்து வந்தது. இதனால் ஆண்டிற்கு மூன்று முறை விடுமுறை காலத்தில் காரைக்குடியில் தங்கியிருப்பது வழக்கமாக இருந்தது. இக்காலத்தில் 1965-திசம்பர் என்பதாக நினைவு அழகப்பர் பொறியில் கல்லூரியில் ஒரு பெரிய கண்காட்சி (Exhibition) நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதனைக் கண்டு களிக்க - என் மக்களுக்கு காண்பிக்க இரு குமாரர்களுடன் பொருட்காட்சிக்குச் சென்றிருந்தேன். அப்போது தாளாளர் செட்டியாரும் தில்லி, சென்னையி லிருந்து வந்த சில முக்கிய அதிகாரிகளுடன் கண்காட்சியைச் சுற்றிவந்து கொண்டிருந்தார். நான் அவரை ஒரிரு நிமிடங்கள்