பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ேW.C.T.V. வேங்கடாசலம் செட்டியார் t ss சென்றார். பொதுவாகத் தரகர்கள் சாதுர்யமாகப் பேசுபவர்கள். அவர்களுக்குள்ளும் இந்தத் தரகர் எமகாதகர். இங்கிதம் அறிந்து செட்டியாரைப் பேட்டி கண்டுவிட்டார். "ஐயா. ஒரு பச்சை எனக்குக் கிடைத்தது. அதனை வாங்கும்போதே உங்கள் நினைவுதான். அஃது உங்களிடம் இருந்தால் இராசி என்றுதான் கொண்டு வந்துள்ளேன்" என்று சொல்லியவண்ண்ம் பச்சை வண்ணத்தாளில் சுற்றி மேலும் ஒரு வெள்ளைத்தாளில் சுற்றி வைத்திருந்த பச்சையை மெதுவாக எடுத்து நீட்டினார். செட்டியாருக்கு இத்தகைய பொருள்மீது பற்றும், இதுபோன்ற பொருள் தம்மிடம் இருந்தால் இதன் இராசியால் தம் செல்வம், செல்வாக்கு எல்லாம் மேன்மேலும் பெருகும் என்ற அழுத்தமான நம்பிக்கை உடையவர் என்பதை நன்கு அறிந்தவர் தரகர் சரியான கொம்பைத்தான் பிடித்தார். செட்டியார் அதனைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார். அவர்தம் முகபாவனையிலிருந்து அவருக்குப் பச்சைமீது பற்றும், பாசமும் வளர்கின்றன என்பதைச் சரியாகக் கணிக்கின்றார் தரகர். இதற்குள் தரகர் தம் மனத்திற்குள்ளே அதன் விலையைத் தீர்மானித்து விடுகின்றார். “சரியப்பா, சரக்கு எனக்குப் பிடித்திருக்கிறது. என்னவிலை?" என்று செட்டியார் கேட்க, அதிகம் இல்லை முதலாளி, ஒரு பத்தாயிரம்தான் என்று தரகர் சொல்ல. உடனே செட்டியார் உள்ளே சென்று பத்தாயிரமாக நூறு ரூபாய் நோட்டுகளைத் தந்து பச்சையைப் பெற்றுக் கொண்டார். பச்சையைப் பரிவுடன் பெற்றுக் கொண்ட செட்டியாரின் முகத்தில் பிரகாசத்தைக் கண்ட தரகர், "முதலாளி. இந்த அற்புத வஸ்துவை எவரிடமும் காட்டாதீர்கள். தண்டவாளப் பெட்டியின் அடியில் போட்டு வையுங்கள்" என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டார். இரண்டு மூன்றாண்டுகள் கழித்து செட்டியார் மும்பை செல்லநேர்ந்தது. நினைவாகப் பச்சையை எடுத்து வைத்துக்கொண்டார். மும்பையில் ஓர் இரத்தின வியாபாரியிடம் காட்டி மதிப்பு போடும்படி சொல்ல. அந்த வியாபாரி யார் இதைத் தந்தது? வெறும் கண்ணாடித்துண்டு. ஐந்து ரூபாய் கூட இதற்கு விலை இல்லை என்று சொல்லிவிட்டார். "படுபாவி என்னையே ஏமாற்றி விட்டானே" என்று நினைத்துக் கொண்டார். செட்டியார்.