பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ேW.CT.V. வேங்கடாசலம் செட்டியார் 20t ஏழை இந்தப் பெரிய முதலாளியிடம் ஒரு பத்தாயிரம் சாப்பிடக் கூடாதா?" என்றும் சொல்ல, "சரி சரி, போப்பா நன்றாக இரு" என்று சொல்லி விடைகொடுத்தார். பச்சைக் கண்ணாடியைப் பச்சைக்கல்" என்று பச்சையாகப் பொய் சொல்லி ஏமாற்றி விட்டதைத் தெரிந்தும், அந்தப் "பச்சைக்கு தண்டவாளப் பெட்டியின் அடியில் புகலிடம் தந்து வாளா இருந்து விட்டார். பச்சையின்மீதுள்ள நம்பிக்கை - மூடப்பழக்கம் - இன்னும் தளரவில்லை. "ஏ பச்சையம்மா, நீதான் இந்த ஏமாறும் பேர்வழிகளைக் காப்பாற்ற வேண்டும். பச்சையை விற்கும் தரகர்களையும் காப்பாற்றுவதும் நின்கடமைதான். அவர்கள் ஏழைகள் அல்லவா? நீயும் ஏழைபங்காளன்தானே!" இந்தச் செட்டியார் என்னிடம் மிக்க அன்புள்ளவர், பல நன்மைகளைச் செய்தவர். இன்று அவர் இல்லை. - நினைவு 5 வள்ளல் டாக்டர் அழகப்பர் திருநாடு அலங்கரித்த பின்னர் அழகப்பர் அறத்தின் தலைவராக அக்காலத்தில் தமிழகத்தின் கல்வி - நிதி அமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியம் நியமிக்கப் பெற்றார். என் பதவி உயர்வு பற்றி இவரிடம் குறிப்பிட்டிருந்தேன். திரு. சி.வி.சி.டி.வி. அவர்கட்கு இதுபற்றி நன்கு தெரியும். தவிர, என்பதவி உயர்வுக்குத் தடைக்கல்லாக எழுப்பிய அவதூறு செய்தியைப் பற்றியும் அவர்தம் புதிர்க் கதிர்ப் பார்வை (X-ray vision) நன்கு அறிந்திருந்தது. இது பற்றி அடியேனுக்கு ஒன்றும் தெரியாது. அவதூறு செய்தியின் கர்த்தாக்கள் மூவர் மூவரும் பார்ப்பனர். இது ஒரு முக்கோண விசைகள் போல் (Triangle of forces) செயற்பட்டது. இத்திட்டப்படி ஒன்று என்னைச் சீட்டுக்கிழித்து வெளியில் அனுப்பிவிடுவது: இரண்டு பதவி உயர்வு இல்லாமல் செய்து விடுவது. இறையருளால், பெரியோர்களின் துணையால் இந்தவிசைகள் "தீயினில் துசாயிற்று." இது பின்னர் விவரிக்கப்பெறும். - என் பதவி உயர்வு உறுதி என்பதைத் தாளாளர் பலமுறை தெரிவித்திருந்தார் நேரில் அடியேனைக் கானாடு காத்தானில்தமது இல்லத்தில் சந்திக்குமாறு ஆள் மூலம் சொல்லியனுப்பியிருந்தார். ஏதாவது அசம்பாவிதம்"நடக்கக் கூடுமென்று சா.க. எச்சரித்ததால் 2