பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

c.W.C.T.V. வேங்கடாசலம் செட்டியார் 2:03 விருந்தோம்பலுக்குப் பேர்போனவர்கள் நகரத்தார்கள். தாளாளர் செட்டியாரவர்கள் சிற்றுண்டி விருந்தில் மிக நன்றாகக் கவனித்தார்கள். பேசிக்கொண்டே சிற்றுண்டி உண்டு, காஃபியையும் அருந்தினேன். பேச்சுவாக்கில் "ரெட்டியார், கல்லூரிவளாகத்தில் உங்கட்கு மூன்று விரோதிகள் உள்ளனர் என்றார். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. இந்த அளவுக்குக் கூர்ந்து கவனித்து என்னைக் காக்கும் நிர்வாகத்தின்கீழ், அதுவும் தங்கள் சீரிய தலைமையின் கீழ்ப் பணியாற்றுவது என் தவப்பயன்" என்றேன். தாங்கள் மாவட்ட வாரியத் தலைவராக இருந்தபோதும், இந்தியன் வங்கியின் இயக்குநராக இருந்தபோதும் தாங்கள் ஆங்காங்கு ஆற்றிய தொண்டைப்பற்றி நிறையக் கேள்வியுற்றிருக்கின்றேன்" என்று மேலும் கூறி அத்தகைய உயர்பண்பை இப்போது தங்களிடம் நேரில் காண்கின்றேன்" என்றேன். - "முக்கரணங்களாலும் பிறருக்குத் தீங்கு செய்யாத அடியேனுக்கு எப்படிப் பகைவர்கள் உண்டானாரோ அறியேன். இஃது என் ஊழால் வந்ததா?" என்று கூறினேன் வருத்தத்துடன். மூவரில் உங்கள் தோழ ஆசிரியர்களில் ஒருவர் பெயர் கூட குறிப்பிட்டார். மற்றவர் மாதிரிப் பள்ளித் தலைமையாசிரியர் மகாகணபதி அய்யர் மூன்றாமவர் மணியன். இந்த மூவரும்தான் "அவதூறு செய்தியின் தந்தையர்கள் உங்கள் தோழ ஆசிரியர் மூலம் மாதிரிப்பள்ளித் தலைமையாசிரியர் அவர் மனைவி மணியன் மனைவி 9 மணியன் என்றவர்கள் மூலம் கடத்தப்பெற்று, என் காதிற்கு எட்டச் செய்து, நடவடிக்கை எடுக்குமாறு மணியன் தொந்தரவு செய்கின்றான்" என்றார். மேலும் அப்பா மணியன், இது ரெட்டியார் மீது சுமத்தப்படும் அபாண்டப்பழி. இஃது இறைவனுக்கே அடுக்காது என்று கூறியதாகவும் சொன்னார். தொடர்ந்து"எங்கள் செட்டியார்கள் மூலம் வேறொருவருக்குப் பேராசிரியர் பதவி தருமாறு பரிந்துரை வருகின்றது. அலெக்ஸாண்டர் ஞானமுத்து ஒரு கிறித்தவரை மனதில் வைத்துக்கொண்டு ஏதேதோ செய்கின்றார். நீங்கள் ஒருவர்தான் உங்கள் காலில் நின்று, உங்கள் பல்வேறு நற்பணிகளைக் கூறி என்னை நேரில் அணுகுகின்றீர்கள். இறைவனும் எனக்கு