பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 நீங்காத நினைவுகள் மனிதர்களை அளவிடும் திறமையை அளித்திருக்கின்றான். உங்கள் முதல்வர் முதலியாரோ முதுகெலும்பு இல்லாத புழு அஞ்சாமல் உங்கள் கடமையைச் செய்து வாருங்கள். தக்க சமயத்தில் பதவி உயர்வு உங்கட்கு வரும்" என்ற உற்சாகமூட்டினார்: "போய் வாருங்கள். இவற்றைத் தெளிவுபடுத்தவே இராய.சொ. மூலமும் பிறர் வாயிலாகவும் சொல்லியனுப்பினேன்" என்று கூறி வழியனுப்பினார். ஒன்றுக்கும் பற்றாத அடியேன்மீது பாயும் இறைவனின் கருணை வெள்ளத்தை நினைந்த வண்ணம் கல்லூரிக்குப் பகல் பதினோரு மணிக்கு வந்து சேர்ந்தேன் - . நினைவு 7 : என் பதவி உயர்வு நடைபெற்ற நிகழ்ச்சி இதில் விவரிக்கப் பெறுகின்றது. இது நீங்காத நினைவாக வெளிவருகின்றது. எங்கள் முதல்வர் துரைக்கண்ணு முதலியாரின் மகள் திருமணம் விழுப்புரத்தில் நடைபெற்றது. அதையொட்டிக் காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் எங்கள் கல்லூரி ஆசிரியர்கட்கும், சிப்பந்திகட்கும் ஒருவிருந்து அளித்தார் பகல் 12 மணிக்கு அதற்குத் தாளாளர் செட்டியாரும் அறக்கட்டளை அலுவலக மேலாளர் திரு. T.V.S. மணியனும் அழைக்கப்பெற்றிருந்தனர். விருந்து பகல் 12.30க்கு நிறைவு பெற்றது. முதல்வர் வீட்டிற்கு முன்னால் போடப்பெற்றிருந்த ஒரு கொட்டகையில் எல்லோரும் உட்கார்ந்திருந்தோம். அப்போது எல்லோரும் எதிர்பாராவகையில் ஒரு திடீர் நிகழ்ச்சி நடைபெற்றது. 2 "என் பதவி உயர்வில் ஏற்பட்ட தடைகள்" நினைவுக் குமிழிகள் - பகுதி 3 குமிழி. 147 விரிவாக விளக்கப் பெற்றுள்ளது. அஃது இந்தக் கட்டுரைக்குப் பொருத்தமாக இராது. எனினும் திரு. C.W.CTV.க்கும் தெரியாமல் மணியனும் முதல்வரும்" செய்த சதி என்பதை அறிந்துகொண்டு விட்டதும் அதனை என் வாழ்வில் விக்கினங்களைப் போக்கும் விநாயகர் போல் செயல்பட்ட சா.கவின் உதவியால் சதியை செயற்படாது தவிர்த்ததும் விளக்கப் பெற்றுள்ளன. 3 இக்காலத்தில் அழகப்பர் அறத்தின் தலைவராக இருந்தவர் தமிழகத்தின் கல்வி-நிதி அமைச்சரா இருந்த திரு. சி.சுப்பிரமணியம் அவர்கள். என் பதவி உயர்வில் தடைகள் எழுந்துள்ளன என்பதை மட்டிலும் குறிப்பாகச் சொல்லி வைத்திருந்தேன். அவரும் அஞ்சாதீர்கள் சட்டப்படி நடைபெறும் என்று உற்சாக மூட்டியிருந்தார்.