பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சி சுந்தரம் * 213 வரலாறு கூறுவதில் ஊக்குவித்தல் ஆகாது என்பது மற்றொரு விதி. இதைச் சொல்லுதல் தேர்வில் கேட்கப்பெறும் வினாவுக்கு விடைதருதல்போல் அமைவதேயன்றி ஊக்குவித்தல் ஆகாது. மீனாட்சி சுந்தரம் கையாண்ட முறை இது "குறத்தி ஒருத்தி மதுரை மீனாட்சி அம்மைக்குக் குறி சொல்லுவதாகக் கற்பனை செய்து குமர குருபர அடிகள் பாடியது "மீனாட்சி அம்மை குறம்" என்னும் பிரபந்தம்" என்று நூலைப்பற்றிச் சுருக்கமாகக் கூறினார். அடுத்து, பாடலைப் புரிந்து கொள்வதற்கு முன்னுரையாகப் பாடலின் பின்னணியைக் கூறினார். பாட்டுடைத் தலைவி மீனாட்சி அம்மை சொக்கலிங்கப் பெருமான்மீது காதல் கொள்ளுகின்றாள்: கருத்திழக்கின்றாள். தோள் மெலிகின்றது. வளை நெகிழ்கின்றது. மெய் பசக்கின்றது. முகமும் வாடுகின்றது. கருத்தில் நின்ற காதலனை அடைவது எப்பொழுது? என எண்ணி எண்ணி ஏங்குகின்றாள். இந்நிலையில் பொதியமலையில் வாழும் குறத்தி யொருத்தி மதுரையை நோக்கி வருகின்றாள். காதல் நோயால் மெலிந்து வாடி அமர்ந்திருக்கும் மீனாட்சி அம்மையைக் காண்கின்றாள். அம்மை தன் கரத்தை நீட்ட, குறத்தி குறி சொல்கின்றாள். முதலில் தன் குலப்பெருமையைக் கூறுகின்றாள் இது மீனாட்சி சுந்தரம் மாணாக்கர் முன் பாடத்தை வளர்த்துக் காட்டத் தொடக்கவுரையாக அமைத்துக் கொண்ட பாடலின் பின்னணி. பாடத்தை எப்படி வளர்ப்பது? என்பது பயிற்சிக் கல்லூரியில் கற்ற முறையைப் பயன்படுத்தினார். "குறத்தி கூறும் தன் குலப் பெருமையை இதோ கேளுங்கள்" என்று கூறிப் பாடலை இசையோடும், தாளத்தோடும் தெளிவாக ஒன்றிரண்டு முறை பாடினார். முதல் தடவை பாடும் போதே பாடலில் அடிதோறும் உள்ள "கல்வி", "தேறல்", "வாய்மடுத்தல்", "பாயல்", "கண்படுத்தல்" "கயற்கண்ணி" என்ற அருஞ்சொற்களையும் சொற்றொடர்களையும் விளக்கினார். கரும்பலகையிலும் எழுதிக் காட்டினார். இதனால் பாடலை இரண்டாம் முறை, மூன்றாம் முறை பாடும்போது குளோப் ஜாமுனை, அல்லது கல்கத்தா இரஸ்குல்லாவை வாயில் இட்டு, பல்லி னால் சிறிது மென்று நாவினால் துழாவச் சுவைப்பதுபோன்ற ஒரு