பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. வெள்ளைவாரணனார் 225 பிறவற்றையும் "பருகுவண்ண அருகா நோக்கமொடு" பார்த்துக் கொண்டு வந்ததைப் போல் இருந்தது என்று சொல்லிவைக்கலாம். இதனைக் கண்ட நஞ்சீயர் அல்லாதார்க்கும் இவர்க்கும் செயல் ஒத்திருக்கச் செய்தே இவர்களானவாசி இருந்தபடி என் என்று இருந்தேன்" என்று அருளிச் செய்ததை நினைந்து கொண்டே வெள்ளை வாரணனாருடன் உரையாடிக் கொண்டு வலம் வந்து கொண்டிருந்தேன்' வெள்ளைவாரணனார் பல்வேறு பகுதிகளை விளக்கிக் கொண்டு வர மெதுவாக வலம் வந்தோம். அவரால் பெற்ற விளக்கம் 'கோயில்' என்று சைவர்கள் வழங்கிவரும் சிற்றம்பலவன் திருக்கோயில் சற்றேறக்குறைய நாற்பது ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. திருக்கோயில் ஊரின் நடுவே உள்ளது.' இத்தில்லைப் பெருங்கோயிலினுள் ஐந்து சபைகள் உள்ளன. (1) நடராசப் பெருமான் திருநடம் புரியும் சிற்றம்பலம் அல்லது சிற் சடை (2) கனகசபை இது சிற்றம்பலத்திற் எதிரிலுள்ள எதிரம்பலமாகும் பொன்னம்பலம் என்றும் வழங்கப்பெறும். இங்குப் பெருமான் தினமும் ஆறுகாலப் பூசைகளும், ஆண்டில் நான்குமுறை திருமஞ்சனமும் கொண்டருள்கின்றார். நாடோறும் காலையத்து மணியளவில் அழகிய சிற்றம்பலமுடையாரும் இரத்தின சபாபதியும் திருமுழுக்கு ஆராதனை பெறுகின்றனர் )ே தேவசபை இது வழக்கத்தில் பேரம்பலம் எனப்படுகின்றது. இது யாகசாலைக் கருகில் ஈசான மூலையில் உள்ளது. இங்குத்தான் உற்சவமூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர் (4) நிருத்த சபை இது நடராசருக்கு 3 "மலை நாட்டுத் திருப்பதிகள் அனந்தபுரத்து அண்னலார் 3வது கட்டுரை - பக். 48 முதற்பதிப்பு - 4 வைணவர்ளும் திருவரங்கத்தைக் கோயில் என்று வழங்கி வருதல் ஈண்டு நினைத்தல் தகும் - - 5 மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஊரின் நடுவே அமைந்துள்ளது போல்.இத்திருக்கோயிலும் ஊரின் நடுவே அமைந்துள்ளதை ஒப்பு நோக்கலாம். - - -