பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 நீங்காத நினைவுகள் முறைமைபெற வுணர்ந்திடநம் தாய்மொழியில் மொழிபெயர்த்தல் முதற்றொண்டாமென்று உறுதிபெற வுணர்ந்தமையால் ஆங்கில நூல் பலவற்றைத் தமிழின் கல்வித் துறைவளர மொழிபெயர்த்தான் சுப்புரெட்டி யெனும்பெயர்கொள் தோன்றல் மாதோ (7) திருந்தப் பயின்றான் தமிழ்நடையின் செப்ட முணரப் பலநூல்கள் பொருந்த வரைந்தான் புகழுடனே வாழ்ந்த புனிதர் அருள்வாழ்வும் வருந்தி யுழைத்தே நாடுயர வாழ்ந்த பெரியோர் வரலாறும் அருந்தும் அமிழ்தாம் எனத்தமிழன் அழகு திகழ வரைந்தனனால் (1 நாடும் மொழியும் உரிமைபெற நல்ல தமிழ்தேர் பாரதியார் பாடும் பனுவல் முதலாகப் பல்லோர் பயிலும் இலக்கியமும் பீடு பெறுமவ் இலக்கியத்தின், பெற்றி கானும் திறனாய்வும் தேடி யரிதற் கற்போர்க்குத் தெவிட்டா விருந்து படைத்தனனே சீரார் காழிப் பிள்ளையார் திகழ்பே ரன்பால் அப்பரெனச் செப்பும் திருநா வுக்கரசர் சீர்த்தி மிக்க வரலாறும் பாரோர் வாழ நாவரசர் பிரிவால் திருவாய் மலர்ந்தருளும்