பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 துணை வேந்தர் டாக்டர் G.N. ரெட்டி நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும் மேன்மேல் உயர்த்து நிறுப்பானும் தன்னைத் தலையாகச் செய்வானும் தான் என்ற நாலடியாரின் திருப்பாடலோடு துணைவேந்தர் G.N. ரெட்டி பற்றிய சில நிகழ்ச்சிகள் நீங்காத நினைவுகளாகப் பதிவு பெறுகின்றன. காரணம், அவர்தம் வாழ்வும் இந்தப் பாடலின் கருத்துக்கு ஏற்றவாறு பொருந்துவதால் அதன் அடிப்படையிலும் பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குத் தத்தம், கருமமே கட்டளைக்கல்" என்ற குறளின் ஒளியிலும் இந்த நிகழ்ச்சிகளைச் சிந்திக்கலாம். கொல்லா நர்ராயணசாமிரெட்டி (G.N. ரெட்டி ஆந்திர மாநிலத்தில் சித்துர் மாவட்டத்தில், சித்துர் நகரத்திற்குப் பத்துக் கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மகாசமுத்திரம் என்ற சிற்றுாரில் பிறந்தவர் (டிசம்பர் (1927). வேளாண்மையே தொழிலாக உடைய நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர். தொடக்கக் கல்வியைத் தம் சொந்த ஊரில் பெற்றார். பின்னர் சித்துரில் மாவட்டக் கழக நடுநிலைப் பள்ளி, பின்னர் உயர்நிலைப் பள்ளிகளில் பயின்றார். அடுத்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் 1 நாலடியார் - 248 2 குறள், 505 3 அடியேனை விட பத்தாண்டு ஐந்து திங்கள் இளையவர்