பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 நீங்காத நினைவுகள் தெலுங்கைச் சிறப்புப் பாடமாகக் கொண்டு பயின்றார். தொடர்ந்து சென்னை கிறித்தவக் கல்லூரியில் தெலுங்கு B.O.L. (Hons) வகுப்பில் சேர்ந்து பயின்று முதல் வகுப்பு முதல்நிலையில் தேர்ச்சி பெற்றார். இதற்குரிய தங்கப்பதக்கமும் (Gold medal) இவரை வந்தடைந்தது. 1949 அக்காலத்தில் B.O.L (Hons) பட்டம் பெற்றவர்கட்கு எம்.ஏ. பட்டம் வழங்கப்பெற்றது ஓராண்டில் (1949). தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாள மொழிகளில் மட்டிலும் இருநூறுக்கு மேற்பட்டவர்கள் இவ்வாறு எம்.ஏ. பட்டம் பெற்றதாக நினைவு. தொடர்ந்து எம்.லிட் (1955 பிஎச்.டி (1962 பட்டங்களைப் பெற்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் ப்யிற்சியளிப்பவராக (Tutor) பணியேற்றார் (1949-50). அடுத்த ஆண்டில் அதே கல்லூரியில் துணைப்பேராசிரியராக ஏழாண்டுகள் பணியாற்றினார் (1950-57), அடுத்து ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் (1958-59 தெலுங்கு விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1953-54 இல் திருப்பதியில் திருவேங்கடவன் பல்கலைக்கழகம் தொடங்கப் பெற்றது. 1959-இல் இப்பல்கலைக்கழகத்தில் தெலுங்கு விரிவுரையாளராகச் சேர்ந்தார். அப்போது இலக்குமி நாராயணன் என்பார் துணைப் பேராசிரியர் (Reader) - துறைத் தலைவர். இக்காலத்தில்தான் ஆகஸ்டு. 1960 நான் காரைக்குடியில் பேராசிரியர் பதவியைத் துறந்து திருப்பதிப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியேற்றேன். இந்தித் துறையில் தங்குவதற்கு இடம் தரப்பெற்றது. பின்னர் விலங்கியல் துறைக்கு இடம் மாற்றப் பெற்றது. இப்போதுதான் இரண்டு ஆண்டுகள் முறையாக உயிரியல் பயின்றேன். திரு. ரங்கராவும், திரு. சீநிவாசலு ரெட்டியும் இதற்கு மிகவும் உதவினர். அப்போது திரு. K. மகாதேவ சாஸ்திரி, திரு. கோதண்ட ராமய்யா, கந்தப்ப செட்டி' திரு சுப்பிரமணியம் ஆகியோர் துறையிலிருந்தனர். 4. திரு கந்தப்பச் செட்டி பயிற்சியாளராக இருந்தவர் சென்னைப் பல்கலைகக்கழகத்தில் தெலுங்கு விரிவுரையாளராகச் சேர்ந்தார். ஒரு சில ஆண்டுகளில் அவர் நஞ்சுண்டு தற்கொலை செய்துகொண்டதாகச் செய்தி எட்டியது. அப்போது நான் திருப்பதியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். -