பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 நீங்காத நினைவுகள் சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கனி' என்பதை என்றும் மனத்தில் இருத்திக்கொண்டு இயங்கினமையால் பல்கலைக் கழகத்தில் பெரும்பாலும் எல்லா நிலையிலும் உள்ளவர்களின் பாராட்டைப் பெற்றது வியப்பன்று. இவர்காலத்தில் இவர்மீது அழுக்காறு கொண்டவர்களும் இருந்தனர். இவர்களை யான் அறிவேன். திருப்பதியில் அக்காலத்தில் ஏன் இக்காலத்தில் கூடத்தான் நிலவிய ரெட்டி - நாயுடு வகுப்புப் போட்டியாலும், தனிப்பட்டவர்களின் பொறாமைக் காய்ச்சலாலும் அங்குமிங்குமாகக் "கிசுகிசுப்பு இருந்து வந்ததையும் யான் அறிவேன். என் வாழ்கையில் இத்தகைய பூசல்களால் அடிபட்ட எனக்கு இவை புதிர்க் கதிர்ப்படங்கள் (X-ray pictures) போல் தெளிவாகப் புலனாயின. எனக்குப் பிடித்தமான நாலடியார் கருத்தொன்று : அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும் மிகைமக்க ளான்மதிக்கற் பால - நயமுணராக் கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும் வையார் வடித்தோது வார்’ என்ற பாடலின் கருத்து என் பணிக்காலத்தில் எப்பொழுதுமே என் மனத்தில் முன் நிற்கும். நாயின் மேலேறி வையாளி விட்டாலென்ன, வீழ்ந்தாலென்ன?" என்ற பழமொழிப்படி அற்பர் புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் அதனால் பிறர்க்கு வருவதோர் உயர்வும் இல்லை. தாழ்வும் இல்லை என்பதை மனத்தில் யான் கொண்டதைப் போல் அவரும் கொண்டொழுகினார் என்பதை யான் கண்டேன். இதனால் நாலடியாரைப் படித்தறிந்தவர் என்பது பொருளல்ல. இக்கருத்தினை தெலுங்கு இலக்கியங்களில் இவர் படித்தறிந்திருக்க வேண்டும். இவ்வாறு பல்லோர் பாராட்டுக்கும் உரியவராக இருந்த டாக்டர் .ெN. ரெட்டிக்கு 1984 - 87 காலத்தில் திருவேங்கடவன் பல்கலைக் 5 திருக்குறள் - 118 6 நாலடியார் - 183