பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் S.N. ரெட்டி . 237 கழகத்தின் துணைவேந்தர் பதவியும் வந்தது. ஒருகாலத்தில் துணைவேந்தர் பதவிக்குப் பெருமதிப்பு இருந்தது. அப்பெருமை இன்று "கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனாற்போல மிகவும் கீழ்நிலைக்கு இறங்கிவிட்டது. இந்தச் சிறுமைக்குக் காரணம் அப்பதவி வசித்தவர்களேயாகும். கோபுரத்தில் ஏற்றி வைத்த பொம்மைபோல், "ஆட்டுவித்தார் ஆரொருவர் ஆடாதாரே" என்ற வாக்கையொட்டியும் செயற்பட்டதே இதற்குக் காரணமாகும். துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் மூதறிஞர்குழு அமையும் முறை, அவர்கள் தேர்ந்தெடுக்கும், துணைவேந்தராவதற்கு உரிய மூவர் பட்டியல் அமைக்கும் முறை இவற்றில் சாதி, சமயம், கட்சி, அரசியல், இவற்றுக்கும் மேலாக பணம் ஆகியவை புகுந்து விளையாடுவதால் பல்வேறு வகையான சீர்கேடுகள், முறைகேடுகள் நடைபெற்று வருவதைக் காணலாம். ஆளுங்கட்சிக் காலத்தில் துணைவேந்தராகப் பதவி ஏற்றவர். அக்கட்சி தேர்தலில் தோல்வியுற்று வேறொரு கட்சி அரசு அமைக்கும் போது முன்னைய கட்சி ஆட்சியில் வந்த துணைவேந்தர் மனச்சாட்சிக்குகந்தவாறு செயற்பட முடிவதில்லை. எல்லாத் துணைவேந்தர்கட்கும் உரிய இந்தச் சாபக்கேடு டாக்டர் G.N. ரெட்டி காலத்திலும் இருந்தது வியப்பொன்றும் இல்லை. இத்தகைய் சூழ்நிலைகளிலும் சில நல்லவர்கள் அனைத்தையும் தாக்குப் பிடித்துக் கொண்டு சிறந்த முறையில் செயற்பட்டவர்களும் இருந்தனர் என்பதற்கும் எடுத்துக்காட்டுகள் உண்டு. . டாக்டர் .ேN. ரெட்டி பல்வேறு பதவிக்காலங்களில் நடைபெற்ற ஒரு சில நிகழ்ச்சிகள் நீங்காத நினைவுகளாக ஈண்டுப் பதிவாகின்றன. நினைவு 1 : 1970 - 71 இல் தமிழ் எம்.ஏ. வகுப்பு தொடங்கப் பெற்றது. 1972 வரை பி.ஏ. பி.எஸ் சி. வகுப்புகளும் இருந்தன. துறைத்தலைவர், ஆசிரியர்கட்குத் தனித்தனி அறைகள் அமைந்தன. தனி அறை கிடைக்காதவர்கட்கு துறை நூலக அறையில் இடம் கொடுக்கப் பெற்றது. இன்னும் ஒரு வகுப்பறை இல்லாமையால்