பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இர幫靈鷲 வீரப்பன் 9. திருமலை சாலை 017 600-சென்னை יסי தொ.பே. 8255865 7.1.999 அணிந்துரை பேராசிரியர் டாக்டர் என். சுப்புரெட்டியார் அவர்கள் பெற்றுள்ள அறிவார்ந்த தமிழ்வளமும், அவர் ஆற்றிவரும் அளப்பரிய தமிழ்த் தொண்டும் நாடும் ஏடும் புகழ் பெற்றவை. ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குள்ளேயே வட்டம் போடும் "கிண்ற்றுத் தவளை அல்லர் அவர். இமயச் சாதனைகளைக் குறிவைத்து சாதகப் பறவையைப் போல் விரிவானம் ஊடுருவிப் பறந்து கொண்டிருப்பவர் பாடுபட்டுவருபவர். ខ្ញុំ يعية இலக்கியத் துறையில் மட்டுமல்லாமல், தத்துவம், சமயம் - குறிப்பாக அறிவியல் போன்ற பல துறைகளிலும் அவரது பணிகளும், படைப்புகளும் மலர்ந்துள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக ஆராய்ச்சி அறிவுடன் ஆன்மிக, சமய இலக்கியத் துறைக்கு அவர் ஆற்றிவரும் அரும்பணிகள் வரலாற்றின் முத்திரை பெற்றவை. இதுவரை பலதுறைகளில் 114 நூல்கள் எழுதியுள்ள பேராசிரியர் சுப்புரெட்டியார் அவர்கள் "நீங்காத நினைவுகள்" என்ற தலைப்பில் இந்த நூலைப் படைத்துள்ளார்கள். இருபது பெருமக்கள் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிக் குறிப்புகளைச் சுவைபட எழுதியுள்ளார்கள். ஒரு முதல் அமைச்சர், ஒரு கல்வி அமைச்சர் மற்றும் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், பல்கலைக்கழகத் துறைத்தலைவர்கள். பேராசிரியர்கள், நீதிஅரசர். கல்விநிறுவனங்களின் பொறுப்பாளர்கள், பொதுவாழ்க்கையில் ஈடுபட்டவர்கள், ஒரு மாணாக்கர் என்று சமுதாயத்தின் பலகூறுகனை விளக்கும் வகையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்துள்ளார்கள் vị