பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 நீங்காத நினைவுகள் வாழ்விக்கும் கருவிதரு விஞ்ஞானத்தில் வாய்த்திருக்கும் பேரறிவு கல்விப்பேறு ஆழ்வாரின் தலைமணியாம் நம்மாழ் வாரை அருகண்ைடி வாய்த்ததுவே ஆய்வுப் பேறு பால்வார்க்கும் தாய்போல துறைகள் தோறும் பலநூல்கள் அவர்யாத்தல் தமிழர் பேதே' என்ற பாடலை நினைவுகூர்ந்து எம்பெருமானின் திருவருளைச் சிந்திக்கின்றேன். - நினைவு 2 ஏற்கெனவே இரண்டு முறை சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு விண்ணப்பித்து நல்லூழ் இன்மையால் வெற்றிகாண முடியவில்லை. பின்னர் என்னைத் தெலுங்கன் என்று காதோடு காதாகப் பேசி என்னைத் தவிர்த்ததையும் செவிவழிச் செய்தி மூலம் அறிந்தேன். மூன்றாவது முறை தமிழ் விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பித்தேன். என்றுமே ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டு இடம் மாற்றத்திற்கு முயலவில்லை. பல்கலைக்கழகத்திலிருந்தால் அறிவு பெறுவதற்கும். ஆய்வு, செய்வதற்கும் வாய்ப்புகள் ஏற்படும் என்று கருதியே சென்னைக்கு வர விரும்பினேன். - - முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றை நினைவுகூர. விரும்புகின்றேன். நான் பள்ளியிறுதி வகுப்பில் இருந்தகாலம் முதல் 1934 - திரு.K.இராமச்சந்திர அய்யர் அறிமுகம் செய்ததால் - திரு. தி.மு. நாராயணசாமிபிள்ளை அவர்களை அப்போது அவர் திருச்சி, மாவட்ட வாரியத் தலைவர் நன்கு அறிவேன். அதன்பிறகு திருச்சி. கல்லூரியில் படித்த காலத்தில் 1934-39 அவர் வக்கீல் தொழில் நடத்தி வந்தபோது திருச்சி பெரிய கடைத்தெருவில் மலைக்கோட்டைக்குச் சற்று அருகிலுள்ள ஒரு மாடியில் அவரது அலுவலகத்தில் அடிக்கடிச் சந்தித்து உறவை வளர்த்துக் கொண்டு. வந்தேன். பி.எஸ்.சி.யில் முதல் வகுப்பில் தேறியவுடன் 3வது நிலை 5. வடவேங்கடமும் திருவேங்கடமும் சிறப்புப் பாயிர மாலை 6