பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 நீங்காத நினைவுகள் அநுபவம்மிக்க ஒருவரை இப்படி இழிவுபடுத்துவது நியாயம் அல்ல' என்றேன். உடனே துணைவேந்தர் குறுக்கிட்டு, மிஸ்டர் கோவிந்தராஜன், பொருத்தமற்ற வினாக்களை விடுத்து திரு. ரெட்டியாரைச் சீண்டாதீர்கள்" என்று அவரை வாய் அடக்கினார். பேராசிரியர் சேதுப்பிள்ளை வினாக்கள் விடுக்கவில்லை. இவர்என் நூல் ஒன்றுக்கு அணிந்துரை வழங்க இசையாதவர். து.வே ! உங்கட்கு பி.ஏ. வகுப்பு எடுத்த அநுபவம் உண்டோ? நான் : இல்லை. பி.டி வகுப்பு எடுத்த அநுபவம் உண்டு: இந்தப் பதவி ஆசிரியர்க்குப் பயிற்சி அளிக்கும் பணிக்குத்தானே! இத்துடன் என் பேட்டி முடிந்தது. டாக்டர் முதலியார் பொதுவாக வினாக்கள் விடுப்பதில்லை. அப்படிவிடுத்தாலும் விண்ணப்பதாரரிடம் எது இல்லையோ அதைத்தான் வினவுவார். அவர் வினவினால், வினப்பட்டவருக்குப் "பட்டை நாமம்" என்பது பொருள் எனக்கு அப்பொழுதே என் முடிவு தெரிந்துவிட்டது. சஞ்சீவிக்குத்தான் கிடைக்கும் என நினைத்து ஊர் திரும்பினேன். அப்படியே அவருக்குப் பதவி கிடைத்தது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் நுழைய எனக்கு ஊழ் இல்லை என்று நினைத்துக் கொண்டேன். டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளைக்குப் பிறகு டாக்டர். மு.வ. சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்தறைப் பேராசிரியானார். சஞ்சீவி அவருக்குக்கீழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். கிட்டத்தட்ட ஒரு பத்தாண்டுக் காலம் சென்னைப் பல்கலைகழகத்திற்கு வந்து கொண்டிருந்ததேன். டாக்டர் மு.வ, வுடன் பழகினதோடு சரி. சஞ்சீவியுடன் யாது காரணத்தாலோ பழகவில்லை. அவரும் என்னுடன் நெருங்கவில்லை. நினைவு - 4 அண்ணா முதலமைச்சராக இருந்த காலத்தில் (சனவரி 3.10.1968) நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டுக் கருத்தரங்கில் கலந்து கொண்டேன். அப்போது என் பிஎச்டி கட்டுரை எழுதுவதிலும் அதனைத் தட்டச்சு செய்வதிலும் மும்முரமாக