பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ந. ಕ@ಕಿರಿ 261 ஈடுபட்டிருந்ததால் மாநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேனேயன்றி, ஆய்வுக் கட்டுரையும் அனுப்பவில்லை. மலருக்கும் கட்டுரை அனுப்பவில்லை. ஒருவாரம் சென்னையில் (புதிய எம்.எல்.ஏ. உணவு விடுதியில் தங்கியிருந்தேன். பலருடன் பழக வாய்ப்புகள் இருந்தன. என்ன காரணத்தாலோ சஞ்சீவியுடன் பழக வாய்ப்பில்லை. ஒரு பகுதியில் சஞ்சீவி ஆய்வுக் கட்டுரை படித்தது நினைவுகூர முடிகின்றது. தவிர, பிற கட்டுரையாளர்கள் தம் கட்டுரைகளைப் படித்த பிறகு நடைபெற்ற கலந்துரையாடலில் சஞ்சீவி அற்புதமாகப் பங்கு கொண்டதைக் கண்டு வியந்தேன். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதைக் கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் கொண்டேன். துரோணர் மகன் அசுவத்தாமைப்போல் நடேச முதலி யார் மகன் சஞ்சீவி திகழ்ந்ததைக் காண என் மகிழ்ச்சி பன்மடங்கு பெருகியது. - நினைவு - 5 :1971 திசம்பரில் 26, 27, 28 அனைத்திந்திய கீழ்த்திசை மாநாடு 26வது அமர்வு உஜ்ஜயினியில் நடைபெறுவதாக இருந்தது. உஜ்ஜயினி தமிழ் இலக்கியத்தில் உஞ்சை என்று குறிப்பிடப் பெறும். அவசரநிலை பிரகடனப் படுத்தப் பெற்றதால் இம்மாநாடு அத்தேதிகளில் நடைபெறவில்லை. இது 1972 - அக்டோபரில் 26, 27, 28 நடைபெற்றது. பல்கலைக்கழகம் என்னைப் பேராளராக அனுப்பி வைத்தது. திரு. சஞ்சீவியும் இம்மாநாட்டிற்கு வந்திருந்தார். அப்போது டாக்டர் மு.வ. மதுரைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர். இம்மாநாட்டின்போதுதான் சஞ்சீவியுடன் பழக்கம் ஏற்பட்டது. அதிலிருந்து அதிக நெருக்கமும் உண்டாயிற்று. என்னைத் தனிமையில் அழைத்துப் பேசினார். ஏதோ மு.வ. சூழ்ச்சி செய்வதாகக் குறிப்பிட்டார். அப்படி ஒன்றும் இராது என்று வலி யுறுத்திச் சொன்னேன். ஒருவாறு ஒப்புக் கொண்டார். இதிலிருந்து டாக்டர் மு.வ. சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தபோது இருவரிடையேயும் சரியான நல்லுறவு இல்லை என்று அறிந்து கொண்டேன். م இம்மாநட்டுக் கருத்தரங்கிற்கு () The Alvars' concept of - salvation (2) Two Sects of South Indian Vaishnavism grop QTotò