பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/13

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

11

இம்முறை அர்த்தமும் அனுபவமும் அடங்கியதாகும். இப்படி சாப்பிட்டால் சுலபமாக ஜீரணமாகிறது; இம்முறையை தவிர்த்து முன்னும் பின்னுமாக மாறி புசித்தால் ஜீரணமாவது கொஞ்சம் கஷ்டமாகிறது; இதை என் சொந்த அனுபவத்தினின்றும் கூறுகிறேன். இங்கு நம்மவர்கள் கடைசியில் மோர் சாப்பிடுவதைப் பற்றி கொஞ்சம் விஸ்தாரமாக எழுத விரும்புகிறேன். மோர் உண்பதினால் உண்டாகும் நன்மை பல ஜாதியார்களுக்கு தெரியவே தெரியாது. முக்கியமாக வெள்ளைக்காரர்கள் இதை வெறுக்கின்றனர்; இன்னும் மற்ற ஜாதியர் பாலைக் கொடுத்து தயிராக்கி அதை மோராக்கி சாப்பிடுகிறதா என்று அலட்சியம் செய்கிறார்கள். பல வருடங்களுக்குமுன் லண்டன் மாநகரத்தில் கூடிய பிரபல 'ஆலோபேதிக்' அல்லது மேல்நாட்டு பிரபல வைத்தியர்கள் பெருங் கூட்டம் ஒன்றில் மனிதன் நெடு நாள் ஜீவித்திருப்பதற்கு முக்கிய ஹேது என்னவென்று விவாதம் வர, இதை நன்றாய் ஆராயும் பொருட்டு வந்த வைத்தியர்களுள் ஐந்தாறு பேர்களை ஒரு சிறு கூட்டமாக்கி ஐரோப்பா கண்டத்திலுள்ள தேசங்களுக்கெல்லாம் போய் விசாரணை செய்து எந்த தேசத்தில் நீண்ட ஆயுளை உடைய ஜனங்கள் அதிகமாயிருக்கிறார்கள் என்று விசாரித்தறிய அந்த கோஷ்டியினரை அனுப்பினார்கள். அவர்கள் பல மாதங்கள் ஒவ்வொரு தேசமாக சுற்றிவந்து தங்கள் தீர்மானத்தை தெரிவித்தனர். அதாவது ஜெக்கோஸ்லோவாகிய என்னும் நாட்டில்தான் 90 வயதிற்கு மேற்பட்ட மனிதர்கள் அதிகமாக ஜீவித்திருப்பதாக கண்டதாயும் அம்மனிதர்கள் நீண்ட ஆயுளைப் பெற்றிருப்பதற்கு அத்தேசத்தவர் சாதாரணமாக 'யோகஸ்ட்' என்னும் பால் தோய்ந்த ஒரு உணவை உண்டு வருவதுதான் காரணம்-என்று தெரிவித்தார்கள். இது அக்காலத்தில் பலருக்கு ஆச்சர்யத்தை உண்டுபண்ணியது, இதில் என்னுடைய ஆச்சர்யம் என்னவென்றால் நம்மவர்கள் பரத கண்டத்தில் தயிரையும், மோரையும் சாப்பிடும் சாதாரண வழக்கம் என்பதை மேல் நாட்டார் இதுவரையில் ஏன் அறியவில்லை என்பதேயாம். நம்முடைய ஆயூர்வேத வைத்திய சாஸ்திரத்தில் பசும் பால், பசும் தயிர், பசும் மோர் என்பவைகளின் சிறந்த குணங்களைப் பற்றி வெகுவாய் கூறியிருக்கின்றனர் இங்கு ஒரு சிறு கதையை எழுத விரும்புகிறேன். பல வருடங்களுக்குமுன் ஒரு முறை நான் டாக்டர் லக்ஷ்மிபதி அவர்களை சந்தித்து என் உடல்நலத்தை பற்றி விசாரித்தேன். அவர் என்னைப் பரிசோதித்து பார்த்து உங்களுக்கு மருந்து ஒன்றும்