பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/22

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

20

 இந்த மூலவியாதியும் நீங்கும் மலச்சிக்கலும் இராது ' என்று கூறினார். அது முதலாக அன்று முதல் இன்று வரையில் எங்கள் வீட்டில் ஏதா வது ஒரு கீரை சமைக்காத நாளில்லை, அன்றியும் பதார்த்த குண சிந்தாமணி என்னும் புஸ்தகத்தை எடுத்து மலச்சிக்கலை உண்டுபண் னும் பதார்த்தங்களின் ஜாபிதா ஒன்றையும் அச்சிக்கலை நிவர்த்திக்கும் பதார்த்தங்களின் ஜாபிதா ஒன்றையும் எழுதி வைத்துக் கொண்டு டாக் டர் நாயுடு அவர்கள் சொன்னபடி நடந்து வருகிறேன். முக்கியமாக நான் தவிர்க்கும் பதார்த்தங்கள் வெள்ளை ரொட்டி, புதியனா, முந்திரி பருப்பு, கசகசா, லவங்கம், ஜாதிக்காய், ஜாதிபத்திரி, சர்க்கரை அதிகமாய் சேர்ந்த தின்பண்டங்கள் முதலியனவாம்.-இதைப் பற்றி முழு ஜாபிதா வேண்டுமென்றால் நான் மேற்கூறிய உணவுப் பொருள் களின் குணங்கள்' என்ற நூலில் கண்டுகொள்க. மலத்தை தாராளமாக போகச் செய்யும் பொருள்கள் தவிட்டு ரொட்டி, பால், தயிர், மோர், நெய் பெரும்பாலும் எல்லாவிதக் கீரைகள் (அருகீரைதவிர்த்து) பெரும் பாலும் எல்லா பழங்கள் கைகுத்தல் அரிசி முதலியவற்றை கூறலாம்: இப் பிரிவிலும் சேர்க்கவேண்டிய பதார்த்தங்களைப்பற்றி மேற்கூறிய உணவுப் பொருள்களின் குணங்கள் ' என்னும் புத்தகத்தில் கண்டு கொள்க. மலச்சிக்கலை தடுப்பதற்கு இன்னொரு மார்க்கத்தை சென்ற 30 ஆண்டுகளாக அனுசரித்து வருகிறேன். அதாவது காய்ச்சி குளிர்ந்த ஜலத்தையோ அல்லது வெந்நீரையோ ஒரு நாளைக்கு மூன்று முறையாவது தாராளமாய் குடிப்பதாகும். சில ஆஸ்பத்திரிகளில் இச்சிக்கலை போக்க மருந்து ஒன்றும் கொடாமல் மேற்சொன்ன முறையே பழகி வருகிறார்கள். மலச்சிக்கலையுடையவர்கள் காலையில் எழுந்தவுடன் (பல் துலக்குவதற்கு முன்பாக) ஒரு டம்ளர் ஜலத்தை குடிப்பது நல்லதாகும். இளவயதில் குளிர்ந்த ஜலத்தை உபயோகிக்க லாம். முதிர் வயதில் வெந்நீரை உபயோகிக்க வேண்டும். இம் முறை யைத்தான் மேநாட்டார்கள் பெட்காபி (Bed coffee) என்னும் வழக் கத்தின்படி கையாண்டு வருகிறார்கள்.


ஆயினும் இவ்விஷயத்தில் நான் ஒரு எச்சரிக்கை செய்ய வேண் டியவனாய் இருக்கிறேன். சில பெயர்களுக்கு காபி சாப்பிட்டால் மலச் சிக்கல் நீங்குகிறது. இன்னும் சில பெயர்களுக்கு அதே காபி மலச் சிக்கலை அதிகரிக்கிறது. இது நான் எனது நண்பர்கள் பலரின் அனு பவத்தில் அறிந்த விஷயம். ஆகவே சில வைத்தியர்களும் இதைப்பற்றி