பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/31

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

29

39 பார்த்தாலே தெரியும். இந்த ஸ்நாநத்தினால் உடல் வெப்பம், ரத்த கொதிப்பு முதலியவை நம்மை அணுகாது இருக்கின்றன. சாதாரண மாக நம்மவர்களுள் ஆடவர் சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்கின்றனர். ஸ்திரிகள் வெள்ளிக்கிழமைகளில் குளிக்கின்றனர் உடம்பெல்லாம் எண்ணெய் தேய்த்தவுடன் ஐந்து நிமிஷம் பொருத்தே குளித்தல் நலம். அதிலும் தலையைத் தவிர மற்ற உடம்பின் பாகங் களிலெல்லாம் கொஞ்சம் வெயில் படச்செய்தால் இன்னும் நல்லது. எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது மாத்திரம் வெந்நீரிலேயே குளிப்பது தமிழர்களுடைய வழக்கமாயிருக்கிறது. மலையாள தேசத் தில் இந்த நிபந்தனையும் கிடையாது. அங்கே பெரும்பாலார் ஆட வரும் பெண்டிரும் கொஞ்சம் எண்ணெய் தேய்த்துக்கொண்டு தினமும் குளிர்ந்த ஜலத்தில் குளிக்கின்றனர். ஆயுள் விருத்தியை விரும்பும் ஒவ்வொருவனும் இந்த அப்யங்கன ஸ்நானத்தை விடலாகாது. எனது அனுபவத்தை இனி கூறுகிறேன். என் மனைவி 1926-வது வருஷம் காலமானது முதல் ஏதோ ஒருவித வெறுப்பினால் இந்த அப்யங்கன ஸ்நானத்தை விட்டேன் நான். அதன் பலனை என் எதிர் வயதில் என் கண் பார்வை கேடராக்ட் (Cateract) என்னும் வியாதியால் கஷ்டப் படுகிறேன். இது நானாக வருவித்துக்கொண்ட நோயாகும்.


வியாயாமம் :- (தேகப்பயிர்ச்சி) , உடலின் ஆரோக்கியத்திற்கு தேகப்பயிற்சி மிகவும் முக்கியம் என்று எல்லா தேசத்தினரும் ஒப்புக்கொள்கிறார்கள். நமது முன்னோர் களும் சிலம்பம் முதலியன பழகி உடம்பை நல்ல ஸ்திதியில் வைத்துக் கொண்டிருந்தனர் என்பதை உங்களுக்கு நான் நினைப்பூட்டவேண்டிய தில்லை. மகம்மதியர்கள் இதற்கு கசரத் என்று பேர் வைத்து தண் டால் பஸ்கி முதலிய பயிற்சிகளால் உடம்பை பலமுள்ளதாக ஆக்கி கொள்கின்றனர் அல்லவா.


இவ்வித தேகப்பயிற்சியினால் தேகத்தில் உள்ள அசுத்த பொருள் கள் எல்லாம் வியர்வை மூலமாகவும் இன்னும் மற்றும் உள்ள உடற் கூறுகள் மூலமாக வெளியேற்றப் படுகின்றன. அப்படி வெளிப் படுத்தபடாவிட்டால் அவைகள் நமது இரத்தத்தில் தங்கி வியாதிகளை உண்டாக்கும். ஆகவே சிறுவயதிலேயே தேகப்பயிற்சி ஆரம்பிப்பது.