பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/33

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

31

 நான் நடித்த நாடகங்களுள் மிகவும் கஷ்டமானது அமலாதித்ய னும் மனோஹரனுமாம். இந்த அமலாதித்யன் என்பது ஷேக்ஸ்பியர் மஹா நாடககவி எழுதிய நாடகங்களுள் மிகவும் சிறந்தது ஹாம்லெட்' என்பதாம். அதை நடிப்பது மிகவும் கஷ்டமென்று எல்லோரும் ஒப் புக்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட நாடகத்தில் கதாநாயகனாக நான் நடிக்க வேண்டுமென்று இச்சை கொண்டு அந்த ஹாம்லெட் நாட கத்தைத் தமிழில் மொழி பெயர்த்து முடிப்பதற்கு ஏறக் குறைய 7 வரு டங்கள் ஆயின. பிறகு அதை நான் 6 மாதம் ஒத்திகை நடத்தினேன். பிறகு எல்லாம் எனக்கு திருப்தியானவுடன் அதை அரங்கேற்றபடி செய்ய ஒரு நாள் குறித்தோம். அச்சமயம் திடீரென்று என்னை விடாது பின்தொடர்ந்து வந்த என்னுடைய ஹிருதயக் கோளாறு கொஞ்சம் அதிகமாயிற்று. இதென்னடா கஷ்டம் இப்பொழுது அதிக மாயிற்றே என்று அதற்கு சிகிச்சை தேடி அக்காலத்தில் ஒரு பிரபல வைத்தியரா யிருந்த டாக்டர் கோமன் என்பவரிடம் போய் இதற்கு சிகிச்சை தேடி னேன். அவர் என்ன நன்றாக பரீக்ஷித்து பார்த்து உனக்கு ஹிரு தய வியாதி இருக்கிறது. ஆகையால் நீ நடிப்பதை விட்டுவிட வேண் டும்." என்றார் இதை வாசிக்கும் எனது நண்பர்கள் அதைக் கேட்ட என் மன நிலைமை எப்படி இருந்திருக்க வேண்டு மென்று அவர்களே நினைத்துக் கொள்ள வேண்டியதுதான், என்னால் வர்ணிக்க முடியாது ! மரண தண்டனை விதிக்கப் பட்டவன் போல் வீட்டுக்கு வந்து ஒன்றும் பேசாது படுத்துக் கொண்டேன். இப்படிப்பட்ட சமயங்களிலெல்லாம் நான் கடைத்தேற ஒரே மார்க்கந்தான் எனக்கு தெரியும். அதாவது நான் வணங்கும் தெய்வமாகிய பெற்றோரை பிரார்த்திப்பதுதான். ஆகவே அவர்களை நீங்கள் விட்ட வழி என்று பிராத்தித்து விட்டு உறங் கினேன். மறு நாள் காலை எழுந்தவுடனே ? நீ உன் கடமையை செய் அதனால் வரும் கஷ்ட கஷ்டங்களை பற்றி உனக்கு கவலை ஏன்? ' என்று என் புத்தியில் பட்டது. உடனே என் கவலை எல்லாம் தீர்ந்த வனாய் அந்நாடகத்தில் மிகுதி ஒத்திகைகளை நடத்தி விட்டு குறித்த தினத்தில் விக்டோரியா பப்ளிக் ஹாலில் அந் நாடகத்தில் கதாநாயக னாக நடித்தேன். அன்றைய தினம் எனது நண்பர்களும் மற்றவர் களும் என் நடிப்பைப் புகழ்ந்து பேசியது போல் அதற்கு முந்தியும் இல்லை பிந்தியும் பேசியது இல்லை.

மேற் சொன்னபடி எனக்கு நடிப்பதில் மிகுந்த கஷ்டம். இரண்டாவது நாடகமானது மனோஹரனாகும். அதை நடிப்பதில் நான் மிக