பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/36

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

34

34 லும் என் கண்பார்வை மிகவும் குறைந்த படியாலும் வெளியில் போய் நடக்க முடியாமற் போனபடியால் என் வீட்டிலேயே மெத்தையில் காற்றோட்டமாய் நடக்க ஏற்பாடு செய்து கொண்டேன். மெத்தையில் என் ஹால் 35 அடி நீளம். இந்த ஹாலில் 150 தரம் நடந்தால் ஏறக் குறைய 1 மைல் நடப்பதற்கு சமானமாகிறது. இந்த கணக்கின்படி ஒரு நாளைக்கு இரண்டு மூன்று மைலாவது நடந்து வருவேன். அப்படி என்றைக்காவது செய்யாமற் போனால் அன்று உணவு சரியாக கொள்ள முடிவதில்லை. அன்றியும் தூக்கமும் சரியாக வருவதில்லை. ஆகவே என்னைப்போன்ற முதிர் வயது அடைந்தவர்களுக்கு தினம் நடத்தலே சரியான வியாயாமம் ஆகும். மதுபானம்

(1) நீண்ட ஆயுளையும் தேக ஆரோக்கியத்தையும் விரும்பும் எம் மனிதனும் மதுபானத்தின் அருகில் நெருங்கவும் கூடாது. நமது பாரத தேசத்தில் அதை அறவே ஒழிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்து வரப்படுவது எல்லோரும் அறிந்த விஷயமே. மதுபானத்தில் ஒயின், சாராயம், கள் முதலிய எல்லா லாகிரி வஸ்துக்களும் அடங் கினவாம். இவைகளைக் குடிப்பதினால் உண்டாகும் கெடுதியைப் பற்றி அதிகமாய்க் கூறவேண்டியதில்லை. இவ்விஷயத்தில் ஒருவாறு சர்ச்சை செய்து பார்க்கலாம். 80 வயதுக்கு மேற்பட்டு ஜீவித்திருக் கும் 20 பேர்களை எடுத்துக் கொண்டு அவர்களில் எத்தனை பெயர் குடிப் பழக்கம் உள்ளவர்கள் எத்தனை பெயர் அக்கெட்ட வழக்கம் இல்லாதவர்கள் என்று ஆராய்ந்து பார்த்தால் மதுபானத்தில் உண்டா கும் கெடுதிகள் நமக்கு வெளியாகும். நான் இவ்வாறு போனவருடம் ஆராய்ந்து பார்த்த போது நீண்ட ஆயுளைப் பெற்ற எனக்கு தெரிந்த 20 பேர்களில் 18 பெயர் மதுவை தீண்டாதவர்களாக இருந்தனர். மற்ற இரண்டு பெயர்களும் ஏதோ மிகவும் கொஞ்சமாக அதை அருந்துவதாக ஒப்புக்கொண்டனர். மதுபானத்தினால் எத்தனை பெயர் நடு வயதிலேயே மடிந்து தங்கள் பெண்ஜாதி குழந்தைகளை அலையவிட்டு இருக்கின்றனர் என்பதை நீங்களே கணக்கிட்டு அறிந் துக் கொள்ளலாம். மதுவை தீண்டுவதை விட நல்லபாம்பை தீண்டு வது மேலாகும் என்பது என் முடிவு. இனி இவ்விஷயத்தில் இரண்டு முறை எனக்கு நேரிட்ட சம்பவங்களை கூறுகிறேன். முதல் சம்பவம் சுமார் எனது 16-வது வயதில் நேர்ந்தது; என்னுடைய பந்து ஒருவர் ஜனவரி மாதம் முதல் தேதி அவருடைய சிநேகிதராகிய