பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/38

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

36

56 யிலையை மென்று உட்கொள்ளுவதினால் மலையாள தேசத்தார்க்கு வாயில் கான்சர் என்றும் புற்று நோய் உண்டாகிறதென்று ஆங்கில வைத்தியர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். ஆகவே இந்த புகையிலை வழக்கத்தை தேக ஆரோக்கியத்தை விரும்பும் எவரும் அகற்றுவது முறையாகும். - புகையிலை :-இந்தப் புகையிலையைப் பற்றி நான் என் அனு பவத்தை கூறுகிறேன். என் சிறுவயதில் என் வயதுள்ள சிநேகிதர் களுடன் கூடி நானும் சிகரெட் பிடிப்பதைக் கற்றுக்கொண்டேன். 1896-ஆம் ஆண்டிலோ என்னவோ ஒருமுறை என் சிநேகிதர்களுடன் கூடி நான் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தபோது எனது நண்பராகிய ஸ்ரீமான் வெங்கடசுப்பராமய்யா அவர்கள் ஒரு முறை சம்பந்தம் உன் மனோதிடத்தப்பற்றி பேசுகிறாயே ஏதோ பார்க்கலாம் இந்த சிகரெட் பிடிப்பதை விட்டுவிடு உன்னால் முடியுமானால்” என்று கேட்டார். நான் அதற்கு 'இந்த க்ஷணம் முதல் நான் இதை விட் டேன் என்று கூறி என் வாயில் இருந்த சிகரெட்டை எடுத்து எறிந் தேன். அதுமுதல் இதுவரையில் அந்த வார்த்தையைக் காப்பாற்றி வருகிறேன். சுருட்டு, சிகரெட் முதலியவைகளை அதிகமாய் பிடிப் பதனால் ஒருவித ஹிருதய கோளாறு உண்டாகிறதென்று ஆங்கில வைத்தியர்கள் கூறுகின்றனர்.


வெற்றிலை பாக்கு :-போஜனம் கொண்டவுடன், சுருட்டு பிடிக் கும் ஆங்கிலேயரின் வழக்கத்தை விட ஹுக்கா பிடிக்கும் மகம்மதியர் களின் வழக்கத்தை விட வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்ளும் இந்துக்களுடைய வழக்கம் மிகவும் சிறந்ததாகும். வெற்றிலைப் பொட்டுக்கொள்ளும்போது அதன் நுனியையும் காம்பையும் நடு நரம் பையும் நீக்கி விட்டு போட்டுக் கொள்ளும் நம்மவர்களுடைய வழக் கத்தை பிரான்சு தேசத்திய விஞ்ஞானி ஒருவர் மிகவும் புகழ்ந்துள்ளார். அன்றியும் வெற்றிலையும் இரண்டு பக்கமும் நன்றாய்த் துடைத்துவிட்டு போட்டுக் கொள்ளுதல் அவசியம் என்கிறார். வெற்றிலையில் பின் புறத்தில் சில வேளைகளில் மிகச் சிறிய வெண்மையான கிருமிகள் இருப்பதாகவும் அவைகளை அகற்றுவதற்கே இம்மார்க்கம் ஏற்பட்டு இருக்கவேண்டுமென்று கூறுகிறார். அன்றியும் வெற்றிலையை வாயில் போட்டுக்கொண்டவுடன் உண்டாகும் ஜலத்தை முதல் இரண்டுமுறை உமிழ்ந்துவிடவேண்டும் என்று நமது ஆயுள் வேத சாஸ்த்திரங்கள்