பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிதேவன் மயக்கம் 11 இராவ: மறு விசாரணையா மகிழ்ச்சிக்குரிய சேதிதான். அதுசரி! என்ன திடீரென்று என் மீது அக்கறை; பணி : அக்கறை உம்மீது அல்ல. பூலோகத்திலே புகார் கிளம்பி விட்டதாம். முன்பு அளிக்கப்பட்ட தீர்ப்புகள், சரியல்லவென்று. இராவ: அதுதானே பார்த்தேன். புகார் கிளம்பி விட்டதா? நான் எதிர்ப்பார்த்ததுதான். பணி: என்ன எதிர்ப்பார்த்தீர்கள்? இராவ: எத்தனை நாளைக்குத்தான், பூலோகவாசிகள், விழிப் புணர்ச்சியற்றுக் கிடப்பார்கள், என்று. பணி: அதுசரி, அற மன்றம் கூடுகிறது. தாங்கள் வரவேண்டு மென்று நீதிதேவன் கட்டளை. இராவ நான் வருகிறேன். என் மீது குற்றம் சுமத்தி, என்னை இரக்கம் எனும் ஒரு பொருளிலா அரக்கன் என்று கூறினாரே, கம்பர், அவரும், அவரைச் சார்ந்தவர்களும் வருகிறார்கள் அல்லவா? பணி: அவர்கள் எவரும் இதில் கலந்து கொள்ள வேண்டிய அவசியமுமில்லை, வரவும் மாட்டார்கள். இராவ: அது எப்படி? என் மீது குற்றம் சுமத்தினார்கள். சுமத்தப்பட்ட குற்றங்களை, பட்டியல் போட்டு, பேழையில் வைத்து, ஆளுக்கொரு புறம் பிடித்துத் தூக்கிக் கொண்டு போய், தேடித் தேடிக் கொடுத்தார்கள். ஐயோ! இன்னும் விசாரணை வரவில்லையே என்று பயந்து, ஓடி ஓடிப் போய்ப் பார்த்தார்கள். அப்படிப் பட்டவர்கள் விசாரணைக்கு வரமாட்டார்கள் என்று கூறுவது எப்படிப் பொருந்தும்? பணி : இதற்கு நான் பதில் சொல்ல வேண்டுமென்று நினைக்கிறீரா? இராவு: சொல்லித்தான் ஆகவேண்டும்.