பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 அறிஞர் அண்ணா பணி : நீர், அறிவாளி! திறமைசாலி! நிர்வாகத்தில் ஆற்றல் மிக்கவர். ஆளும் திறமை மிக்கவர். உமது ஆட்சிக் காலத்தில் செய்த சர்தனைகள் பலப்பல. அப்படிப்பட்ட நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு, அவர்கள் சரியாகப் பதில் சொல்ல முடியாமல், திணறி, தத்து பித்து என்று. முன்னுக்குப் பின் ஏதாவது உளறி விட்டால் சாட்டப்பட்ட குற்றங்கள் உடைபட்டு விடுமோ, என்ற அச்சம், அவர்கட்கு இருக்கலாம்.... இராவ: அதனால், கலந்து கொள்ளாமல் இருக்கலாம் என்று, கூறுகிறாயா? பணியாளனே கேள் என் மீது குற்றம் சுமத்தியவர்கள் விசாரணையில் கலந்து கொள்ளத்தான் வேண்டும். எனது கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும். அதன் வாயிலாக உண்மை உலகுக்குத் தெரிய வேண்டும். அவர்கள் வர மறுத்தால், நான் விசாரணையில் கலந்து கொள்ள மாட்டேன். விலகிக் கொள்கிறேன் என்று நீதிதேவனிடம் கூறிவிடு. நீ. போகலாம். [காட்சி முடிவு] = காட்சி 3 இடம் : நீதிதேவன் மாளிகை (நீதிதேவன் அமர்ந்து இருக்கிறார். பணியாள் வருதல். அவனைக் கண்டதும்) நீதிதேவன் ? என்ன அறமன்றம் கூட ஏற்பாடுகள் செய்து விட்டாயா? இராவணனிடம் செய்தியைச் சொன்னாயா? பணி : ஏற்பாடுகள் முடிந்து விட்டன.தேவா. ஆனால், இராவணன் விசாரணையில் கலந்து கொள்ள மறுக்கிறான். நீதி : ஏன், என்ன காரணம்? பணி தன் மீது குற்றம் சுமத்தியவர்களை, தான் குறுக்கு விசாரணை செய்ய சம்மதித்தால்தான், வருவேன் என்று கூறுகிறான்.