பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிதேவன் மயக்கம் 15 என்று இராவணன் இரக்கமற்ற அரக்கன்' நீதிதேவனிடம் சமர்ப்பிக்கிறார். இராவணன் தன் வழக்கைத் தானே நடத்த இசைகிறான். கோர்ட்டிலே, நீதிதேவன் தலைமை தூங்குகிறார், கம்பர், ஓலைச் சுவடிகளுடன் தயாராக இருக்கிறார். சாட்சிகளாகச் சூர்ப்பனகையும், கைகேயியும் ஆஜராகியுள்ளனர். இராவணன், எப்போதும் போலவே கெம்பீரமாக வருகிறான். வழக்கு ஆரம்பமாகிறது.] நீதி : இலங்காதிபனே! உன் கட்சியை எடுத்துக் கூற யாரை நியமித்திருக்கிறீர்? இரா : என்னையே நம்பி ஏற்றேன் இப்பணியையும்! கம்பரே! உமது கவிதையிலே கொஞ்சம் எடுத்துக் கொள்ள அனுமதியுங்கள். கம்பர் புன்னகை புரிகிறார்.] நீதி : உமது கட்சியை நீரே எடுத்துப் பேசப் போகிறீரா? இரா : ஆமாம்... நான் போதும் அதற்கு என்று நம்புகிறேன். நீதி : வணங்கா முடியான் என்றோர் பெயர் உமக்குண்டா? கம்: பெயர்' என்று கூறுவதை விட, வசைமொழி' என்பது பொருந்தும். இரா : பொருத்தம் பார்ப்பதானால், வணங்காமுடியான் என்று ஓர் பழிச்சொல் உண்டு என்று கூறலாம். நீதி : சொல் விளக்கத்துக்குள் நுழைய வேண்டாம். அவ்விதம் அழைக்கப்பட்டதுண்டா? இரா : ஆமாம்... நீதி : ஏன்? இரா : நான் கேட்க வேண்டிய கேள்வி அல்லவா அது! கம் : எவருக்கும் வணங்கினதில்லை; மதிப்பதில்லை. அவ்வளவு மண்டைக் கர்வம் என்று பொருள்படும்.