பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 அறிஞர். அண்ணா நீதி : (கம்பரைப் பார்த்து) இரக்கமின்றி இராவணன் நடந்து கொண்டவைகளை விவரமாகக் கூறும். கம் : ஆகா! தடையின்றி.. இராவணன் மகாபண்டிதன்; வல்லமை மிக்கவன், தவசியும் கூட. சாமவேதம் பாடியவன். சௌந்தர்யத்தில் நிகரற்றவன், எல்லாம் இருந்தது அவனிடத்தில் ஆனால் இரக்கம் என்ற ஒரு பொருள்தான் இல்லை. இரக்கமின்றி இராவணன் செய்த பல கொடுஞ் செயல்களை நான் விவரமாகக் கூறுகிறேன். கேளுங்கள்... இரா : கம்பரே! சிரமம் ஏன் தங்களுக்கு? இரக்கம் என்ற ஒரு பொருள் இல்லாத அரக்கன் என்பது தங்கள் குற்றச்சாட்டு. அதற்கு ஆதாரம் கூறி ஏன் அலுத்துப் போக வேண்டும்? நானே கூறுகிறேன். கேளும்... பூங்கொடி துவள்வது போலானாள், அந்தப் பொன் அவிர்மேனியாள் சீதாவை நான் சிறையெடுத்தபோது நான் இரக்கம் காட்டவில்லை. அவறினாள் - நான் அரக்கன் என்று அறிந்ததும்! நான் இரக்கங்காட்டவில்லை. 'சபித்து விடுவேன்' என்றாள்; புன்னகை புரிந்தேன். அழுதாள், சிரித்தேன். பிராணபதே என்று கூவினாள்; எதற்கும் நான். இரக்கங் காட்டவில்லை. அடே, துஷ்டா! அரிபரந்தாமனின் அவதாரமடா இராமன். அவனுடைய தர்ம பத்தினியையர் இந்தக் கோலம் செய்கிறாய்?' என்று வயோதிக சடாயு. வாய்விட்டு அலறினான் சீதை உயிர் சோர, உடல் சோர, விழியில் நீர் வழிய, கூந்தல் சரிய ஆடை நெகிழ அலங்கோலமாக இருக்கக்கண்டு! போடா போ என்றேன். போரிடத் துணிந்தான். போக்கினேன் அந்தப் புள்ளின் உயிரை இரக்கம் காட்டினேனா? இல்லை.