பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிதேவன் மயக்கம் 19 அரசிளங்குமரி சீதையை அசோக வனத்திலே சிறை வைத்தேன். ராஜபோகத்தில் இருக்க வேண்டிய அந்த ரமணியைக் காவலில் வைத்தேன். சேடியர் புடைசூழ நந்தவனத்திலே ஆடிப்பாடி இருக்க வேண்டிய அழகியை, அரக்க மாதர் உருட்டி மிரட்ட, அவள் அஞ்சும்படியான நிலையிலே வைத்தேன். அந்த அழகியின் கண்கள் குளமாயின. நான் இரக்கம் காட்டினேனா? இல்லை.. இரக்கம் காட்டவில்லை. தேகம் துரும்பாக இளைத்துவிடுகிறது, தேவகாலனே! என்று என்னிடம் கூறினர்; கோதாக்கூந்தல் - பேசா வாய் - வற்றாத ஊற்றெனக் கண்கள்: வைதேகி, விசாரமே உருவெடுத்தது போலிருக்கிறாள்' என்று சொன்னார்கள். பழம்,பால்,மது,மாமிசம்,மலர் - எதனையும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டாள் ஜானகி' என்று தெரிவித்தார்கள். சரி, புத்தி கூறு; மிரட்டு; கொன்று போடுவேன் என்று சொல்; பிடிவாதம் கூடாது என்று தெரிவி; தேவர்க்கும் மூவர்க்கும் அஞ்சாத இலங்காதிபதி, ஒரு தையலின் கண்ணீருக்கு அஞ்சமாட்டான் என்று சொல்' என்றுதான், என்னிடம் சேதி சொன்னவர் களுக்குச் சொல்லி அனுப்பினேன். இரக்கம் காட்டவில்லை? கொலுமண்டபத்திலே கொட்டி அளத்தான் விபீஷணன்! 'தம்பீ! உனக்குத் தாசர் புத்தி தலைக்கேறி விட்டதடா என்று கூறி உட்கார வைத்தேன். இரக்கம் காட்டவில்லை. போதுமா? இன்னமும் ஏதாகிலும் கூறட்டுமா! ஈரமற்ற நெஞ்சினன்நான் என்பதற்கான ஆதாரங்கள்! இதேது, அரக்கன் முரடன் மட்டுமில்லை, முட்டாளாகவுமன்றோ இருக்கிறான்! எதிர்க்கட்சிக்காரன் கூறுவதை விட ஆணித்தரமாகக் குற்றப் பட்டியலைத் திட்டமாகக் கூறுகிறானே என்று யோசிக்கிறீர்களா?