பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 அறிஞர் அண்ணா இன்னமும் கொஞ்சம் செந்தேன் ஊற்றுகிறேன், உங்கள் சிந்தனைக்கு. களத்திலே என் தம்பி மாண்டான்; கதறினர் மக்கள். என் மகன் மாண்டான்; மண்டோதரி மாரடித்து அழுதாள். என் மக்களின் பிணம் மலையாகக் குவிந்தன. எங்கும் ரத்தம்! எங்கும் பிணம் நாசம் நர்த்தனமாடிற்று. அயோத்தியான் ஏவிய அழிவு, ஆழிசூழ் இலங்கையில் இடம் பிடித்துக் கொண்டது. கானமும் கட்டளையும், ஏவலரின் பணிவான பேச்சும், காவலரின் கெம்பீரமான முழக்கமும், எந்த இலங்கையிலே நித்ய நாதமாக இருந்ததோ, அங்கு குடலறுந்தோர் கூக்குரல், கரமிழந்தோர் கதறல்; பெண்டிரின் பெருங்குரல்; பிணங்களைக் கொத்த வந்த பெரும் பறவைகளின் சிறகொலி இவை நிரம்பின. நான் இரக்கம் காட்டினேனா? அதுதான் இல்லை. இராவணன்,படபடவென்று பேசியவன், கொஞ்சம் களைத்து உட்கார்ந்தான். கோர்ட்டாரின் உத்தரவின் பேரில் அவனுக்கு ஒரு கோப்பையிலே சோமரசம் தருகிறார்கள். இராவணன் புன்னகையுடன் மறுத்துவிடுகிறான்.) "என் அரசு உலர்ந்தது, அது தெரிந்து என் உற்சாகம் உலர்ந்தபோது, இதுபோல் 'ரசம்' நான் பருகிடவில்லை. 'பழிவாங்குதல்' எனும் பானத்தையே விரும்பினேன். இரக்கம் என்ற ஒரு பொருள் இல்லா அரக்கன்! கம்பரே! இதுதானே உமது கவிதா நடையிலே உள்ள வாசகம்? என் மீதுள்ள குற்றச்சாட்டு! இராவணன் ஏன் அழிக்கப்பட்டான். அவன், இரக்கம் என்ற ஒரு பொருள் இல்லா அரக்கனானபடியால்! - மிகச் சுருக்கமாக முடித்து விடுகிறீர், கவியே! நான், என் மீது குற்றம் சாட்டுபவருக்குச் சிரமம் அதிகம் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான், எந்தெந்த