பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிதேவன் மயக்கம் 21 சமயத்திலே நான் இரக்கமின்றி நடந்து கொண்டேன் என்ற விஷயங்களைக் கூறினேன். கம்: எங்களால் கூட முடியாது - அவ்வளவு தெளிவாகக் கூற! இரா : இதைவிடத் தெளிவாக இருக்கும்... இனி என்னுடைய பதில் நீதி : பல சமயங்களில் இரக்கமின்றி நடந்து கொண்டதை விவரமாக எடுத்துக் கூறிய பிறகு பதில் என்ன இருக்கிறது தெரிவிக்க? இரா : பதில், ஏராளமாக இருக்கிறது. அநீதியுடன் நடந்தாக வேண்டும் என்று தீர்மானிக்கும் வழக்கு மன்றங்களைக் கூட, நீதியின் பக்கம் இழுக்கக் கூடிய அளவுக்குப் பதில் உண்டு - கேளுங்கள்: இரக்கம் இரக்கம் காட்டவில்லை. நான் ... யாரிடம்? ஒரு பெண்பாலிடம்! அபலையிடம்! ஏன்? அரக்கனல்லவா நான்! இரக்கம் என்ற ஒரு பொருள்தானே கிடையாது, கம்பர் கூறியதுபோல்! கம்பர் கூறுவதானாலும் சரியே- தாங்கள் கூறினாலும் சரியே! இரக்கம் என்றால் என்ன? இலட்சணம் கூற முடியுமா? இன்னவிதமான நிலைமைக்குத்தான் இரக்கம் என்று பெயர் என்று திட்டவட்டமாகக் கூறமுடியுமா? கம் : இலங்காதிபதி வழக்கு மன்றத்திலே நிற்கிறார்; பள்ளிக்கூடத்திலே அல்ல! இரா : நீதியின் கூட்டத்திலே நிறுத்தப்பட்டிருக்கிறேன். ஆகவே தான் என் மீது சாட்டப்பட்ட குற்றத்தின் தன்மையை, குற்றம் சாட்டுபவர்கள் முதலில் அளக்க வேண்டும் என்று கேட்கிறேன். உங்களுக்குத் தண்டிக்க மட்டும் தான் தெரியும்? விளக்கவும் தெரிய வேண்டுமே! கூறுங்கள்.. இரக்கம் என்றால் என்ன? எது இரக்கம்? உங்களைக் கேட்கிறேன், உங்களை ஏன் ஊமையாகி விட்டீர்கள்? இரக்கம் என்றால் என்ன பொருள்?