பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிதேவன் மயக்கம் 23 கம்: வேடனா? அவன் தவசியின் பேச்சைத் தள்ளி விடுவான். முரடனல்லவா அவன்? இரா: முரடனாக மட்டுமா இருக்கிறான்? ஞானக் கண்ணிலாக் குருடன்.... கம்: வாஸ்தவம், வாஸ்தவம்.. இரா : அந்த முரடன், குருடன், ஊமையல்ல அவன் என்ன செய்வான் தெரியுமா; தவசியைப் பார்த்து? 'முனிபுங்கவரே! என் தொழில் காட்டிலே வேட்டை யாடுவது. இந்த மானை நான் கொன்றால்தான் இன்றைய வாழ்வு எனக்கு! 'இரக்கமில்லையா...' என்று கேட்கிறீர். தவசியே! பரமனையே நோக்கித் தவம் புரியும் உமது கூட்டத்தவர் யாகங்களிலே, ஆடுகளைப் பலியாக்குகிறீர்களே, அந்தச் சமயம் இரக்கம் என்று ஒரு பொருள் உம்மை விட்டுப் போய்விடும் காரணம் என்ன' என்று கேட்பான். கேட்டான் என்று கருதுவோம். முனிவர் என்ன சொல்வார்? கம்முட்டாளே யாகம் பகவத் ப்ரீதிக்கான காரியம் என்று கூறுவார். இரா : 'இறைவன் வழிபாட்டுக்கான காரியத்துக்கும் இரக்கம் என்ற பண்புக்கும் பகையா... ஸ்வாமி! என்று வேடன் கேட்பானே!" நீதி :கற்பனைக் காட்சிகள் ஏன்? உன் கட்சியைக் கூறு. இரக்கம் என்றால் பிறர் கஷ்டப்படுவது கண்டு மனம் இளகுவது. அந்த உயரிய பண்பு உன்னிடம் இல்லை... இருந்ததா? இரா இல்லை! நானே கூறினேனே, எந்தெந்தச் சமயங்களிலே இரக்கம் கொள்ளவில்லை என்பதை. நான் இரக்கப்பட்டேன் என்று புளுகு பேசித் தப்பித்துக் கொள்ள விரும்பவில்லை. என் வாதம் வேறு...