பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 அறிஞர் அண்ணா நீதி : அது என்ன வாதம்? கூறும்.. கேட்போம்! இரா : இரக்கம் - எனக்கு இல்லை என்று கூறி, அந்த ஒரு பொருள் இல்லாத நான், அரக்கன் என்று கூறி, அரக்கனான நான் அழிக்கப்பட்டது; இரக்கம் எனக்கு இல்லாததால்தான் என்று பேசுகிறார்களே, அது வீண் அபவாதம்! ஏனெனில், ஒருவனுடைய சிந்தனையும், செயலும் அவனவனுடைய தொழில், வாழ்க்கை முறை, இலட்சியம் என்பனவற்றைப் பொறுத்திருக்கிறது... அந்த நிலையிலே, 'கருணாகரன்' என்று புகழப்படுபவர்களும் கூட பல சமயங்களிலே இரக்கமற்று இருந்திருக்கிறார்கள். இரக்கம் இல்லாதார் அரக்கர் என்றால் அனைவரும். ஆண்டவன் உட்பட அனைவரும் அரக்கர்தான்.. நீதி : விசித்திரமான வாதமாக இருக்கிறது. இரா : வேடன், இரக்கத்தைக் கொள்ள முடியாததற்குக் காரணம் அவனுடைய வாழ்க்கை முறை, தொழில்! வேதமோதி வேள்வி நடாத்தும் முனிவர்கள், யாகப் பசுக்களைச் சித்திரவதை செய்யும்போது இரக்கம் காட்டாதது. அவர்கள், இரக்கம் என்பதைவிட, பக்தி என்ற வேறோர் இலட்சியத்துக்கு அதிக மதிப்பு தருவதே காரணம். வேடனின் வாழ்வும், வேதமோதியின் உயர்வும் அவரவர்க்கு இரக்கத்தைவிட அதிக அவசியமுள்ளதாகத் தெரிகிறது. ஆஸ்ரமங்களிலே உள்ள மான்தோல் ஆசனங்கள்,இரக்கத்தின் அடையாளச் சீட்டுகளா? விதவிதமான யாகங்கள், இரக்க லட்சியவாதிகளின் செயலா? எங்கே இரக்கம்? ஏன் இல்லை? அவர்கள் அரக்கரல்லவா? நான் மட்டுமா அரக்கன்? கம் : தபோதனர்களை அரக்கராக்கிவிட்டார் இலங்கேசன்! இனி, தயாபரனையும் குற்றம் சாட்டுவார் போலும்! இரா : தாய் பிடிக்க, தந்தை அறுக்க, சீராளனைக் கறியாக்கும்படி தயாபரன் சோதித்தது, இரக்கமென்ற ஒரு பொருள் இல்லாதவர் அரக்கர் என்ற உமது