பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிதேவன் மயக்கம் 25 இலக்கணத்தைப் பொய்யாக்கத்தான் சிறுத்தொண்டன் உமது சிறுமதிக் கோட்பாட்டைப் பெருநெறியெனக் கொண்டிருந்தால், சிவனாரை நோக்கி, 'ஐயனே! பாலகனைக் கொன்று கறி சமைக்கச் சொல்கிறீரே, ' எப்படி மனம் வரும்? இரக்கம் குறுக்கிடுமே!' என்று கூறியிருந்திருப்பார். உமது தொண்டர் புராணமும் வேறு உருவாகி இருக்கும் அல்லவா? கம் : பேசினால் மிருகத்தின் கதை; இல்லாவிட்டால் மகேசன் கதை! இவ்வளவுதானா? இவை இரண்டும் வாதத்துக்குத் தக்கவையாகா.ஒன்று பகுத்தறிவு இல்லாத பிராணிக் கதை; மற்றொன்று மனித நீதிக்குக் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லாத மகேஸ்வரன் விஷயம். பிரஸ்தாப வழக்குக்கு இரண்டும் பொருந்தா. நீதி : கம்பர் கூறினது முற்றிலும் உண்மை. காட்டில் புலியும், கைலையில் உலவும் ஈசனும் கோர்ட் விவகாரத்திலே உனக்கு உதவி செய்ய முடியாது. இரா

வேள்வி செய்யும் முனிவர்கள், இரக்கம் கொள்ளவில்லை என்பதைக் கூறினேனே.. நீதி : ஆமாம்... கம்பரே! குறித்துக் கொள்ளும்.....சரி, இராவணரே! வேறு உண்டோ! இரா ஏராளமாக! ஆமாம்.- தாங்கள் எதற்குக் கட்டுப்பட்டவர்? நீதி : நீதிக்கு! இரா : மண்டோதரி; இது சமயம் இங்கு நின்று கதறினால். நீதி : நீதி நெறியினின்று நான் அப்போதும் தவற முடியாது. இரா : அவளுடைய கண்ணீரைக் கண்டும். நீதி : கண்ணீருக்காகக் கடமையினின்றும் தவற மாட்டேன். இரா : அப்படியானால் கடமை பெரிதா? இரக்கம் பெரிதா? நீதி : சிக்கல் நிறைந்த கேள்வி...