பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 அறிஞர் அண்ணா இரா : சிக்கல் நிறைந்ததுதான்! ஆனால் பவருக்கும் இந்தப் பிரச்னை வந்தே தீரும். கடமையின் படிதானே நீர் நடந்தாக வேண்டும்?

நீதி : ஆமாம்! இரா : கடமையை நிறைவேற்றுகையில் அச்சம், தயை, தாட்சண்யம், -துவும் குறுக்கிடக் கூடாது. ஆக அறமன்றத்திலே நீர் வீற்றிருக்கும்போதெல்லாம் அரக்கர் தானே? நீதி : கம்பரே! குறித்துக் கொள்ளும்! கம் : உயர்ந்த இலட்சியத்துக்காக உழைக்கிறீர்கள்; இரக்கம் என்பதை இலட்சியப்படுத்தாதது குற்றமல்ல. இரா : ஆம்! ஆனால் எது உயர்ந்த லட்சியம் - எது குறைந்தது என்பது அவரவர்களின் சொந்த அபிப்பிராயம். அந்த அபிப்பிராயத்தை உருவாக்குவது அவரவர்களின் தொழில், வாழ்க்கை முறை, ஜீவியத்திலே அவர்களுக் கென்று ஏற்பட்டுவிடும் குறிக்கோள் இவற்றைப் பொறுத்தது. நீதி : சரி! வேறு உண்டோ? இரா : ஏன் இல்லை! தபோதனரும் நீதிபதியும் மட்டுந்தானா? என்னைப் போன்றவர்கள் இன்னும் ஏராளம்: சாட்சிகளை அழையுங்கள். இனி... (சாட்சிகள் பட்டியைப் பார்க்கிறார் நீதிதேவன்... சூர்ப்பனகை வருகிறாள்.] இரா : தங்கையே! உன் கதையைக் கூறு 'நீதி: எழுதிக் கொடுத்து விடட்டுமா? இரா : ஆமாம்! ஆயிரமாயிரம் வீரர்களுக்கு அதிகாரியாக வீரமொழி பேசி வந்த என் தங்கை, இப்போது, நாலு பேர் நடுவே நின்று பேச முடியாதபடி தான் ஆக்கப்பட்டுவிட்டாள்...