பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 அறிஞர் அண்ணா தங்கை வேறு எந்தச் சமயத்திலேனும் நடந்து கொண்டாளா? கம் : இல்லை! ஒரு முறை செய்தால் மட்டும் குற்றம் குறைந்து விடுமா, என்ன? இரா : அதற்கல்ல நான் கேட்பது? ஒருநாளும் இன்றி, அன்று இராமனைக் கண்டதும் காதல் கொண்டாள். அவளுடைய குணமே கெட்டது என்றா அதற்குப் பொருள்? அன்று மட்டும் அவ்விதமான எண்ணம் ஏற்பட்டது ஏன்? கம்: என் இராமனுடைய செளந்தர்யத்தைக் கண்டும் இரா : குற்றம் அவளுடையதா? கம்: ஏன் இல்லை? சீதையிருக்க, இவள் எப்படி.. இரா : மன்னர்கள் பல மனைவியரை மணம் செய்வது முறைதானே? கம்: ஆமாம்! ஆனால் இராமன் ஏக பத்தினி விரதனாயிற்றே! இரா : அவள் அறியமாட்டாளே! ஆகவேதான், தன் ஆசையைத் தெரிவித்தாள். அன்றுவரை அவள் எந்த ஆடவரிடமும் வலிய சென்று காதலை வெளியிடும் வழுக்கி விழுந்தவளல்ல! அன்று ஓர் வடிவழகனைக் கண்டாள்; மன்றாடி நின்றாள். இரக்கம் இருந்தால் ஏற்றுக் கொண்டிருக்கலாமே! விரதத்துக்குப் பங்கம் வரக்கூடாதென்பதிலே விசேஷ அக்கறை கொண்டு, அவளை நிராகரிப்பதானாலும்; இப்படி அலங்கோலப் படுத்தாது இருந்திருக்கலாமே! அவளுடைய நாசியைத் துண்டித்தபோது இராம - இலட்சுமணர்கள் இரக்கத்தை எத்தனை யோசனை தூரத்திலே விரட்டினார்கள்? அவர்கள் அரக்கரல்லவா? கம் : காமப்பித்தம் பிடித்து அலைந்தவளைத் தண்டிக்காமல் விடுவரோ?