பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிதேவன் மயக்கம் 29 இரா : கம்பரே! நான் இருக்கிறேன், தண்டனை தர! என். தங்கையின் துர்நடத்தையை எனக்குத் தெரிவித் திருக்கலாமே! ஏதாவது தந்திரம் பேசி, அவளை அனுப்பி விடுவது; மறுபடி அவள் வருவதற்குள் எனக்குச் செய்தி அனுப்பினால், நான் இருக்கிறேன், அவளுக்குப் புத்தி புகட்ட! இரக்கமும் இல்லை; யூகமும் இல்லை. இதோ, இங்கே நிற்கிறாள், நாசியற்ற நங்கை! இரக்கத்தை மறந்த அரக்கரால் அலங்கோலப் படுத்தப்பட்டவள்! தங்காய் போ! தயையே உருவெடுத்தவர்களின் தீர்ப்பு: நான் இரக்கமென்ற ஒரு பொருள் இலா அரக்கன் என்பது! ஒரு நாள் சிக்கின சூர்ப்பனகை, எந்த நாளும் எவர் முன்பும் வரமுடியாத நிலையைப் பெற்றாள். என் கைதியாகப் பலநாள் இருந்த சீதை, சௌந்தர்யவதியாய், சகல செளபாக்கியங்களையும் அயோத்தியிலே பிறகு அனுபவித்தாள். ஆனால் நான் அரக்கன். [சூர்ப்பனகை போய் விடுகிறாள். நீதிதேவன் மறுபடியும் சாட்சிப் பட்டியைப் பார்க்கிறார்.] இரா : நீதிதேவா! சாட்சிப் பட்டியிலே தாடகை, சுபாகு, மாரீசன், கரன் முதலிய வதைபட்ட என் மக்களின் பெயர் இருக்கும். அவர்களெல்லாம் துஷ்டர்கள். ஆகவே தண்டித்தார் என்று கம்பர், பல்லவி பாடுவார். ஆகவே, அவர்களை விட்டுவிடும். கூப்பிடும் கைகேயி அம்மையை! (கைகேயி வருகிறாள்] இரா: கேகயன் மகளே! மந்தரையின் சொல்லைக் கேட்ட பிறகு, இராமனைப் பட்டத்துக்கு வரவிடாமல் தடுக்க நீ திட்டம் போட்டாயல்லவா? கை : ஆமாம்!