பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 அறிஞர் அண்ணா இரா : சக்கரவர்த்தியின் மூத்த குமாரன் என்ற முறையிலே இராமனுக்கு அயோத்தியிலே ஆனந்தமாக வாழ்வு இருந்ததல்லவா? கை: ஆமாம்! இரா : அதிலும் கண்ணோடு கண் கலந்த காதல் வாழ்க்கை நடத்தி வந்தக் காலம்.. கை: ஆமாம்... இரா : அப்படிப்பட்ட ஆனந்த வாழ்விலே இருந்த இராமனைக் காடு போகச் சொன்னபோது, அடவியிலே உள்ள கஷ்டம், ஆபத்து இவைகளுக்கு இராமன் உள்ளாகி, மிகவும் கஷ்டப்படுவானே என்று உமக்குத் தோன்றவில்லையா? என்று கை : தோன்றிற்று ஆனால் பரதன் நாடாள்வதாக இருந்தால் இராமன் காடேகத்தான் வேண்டும் தீர்மானித்தேன். வேறு வழியில்லை. இரா : பஞ்சணையில் துயிலும் இராமன் பசும் புல்தரையிலே படுப்பான், கனகமணி அணிந்தவன் மரஉரிதரிப்பான்; ராஜபோஜனம் உண்டவன் காய்கனி தின்பான்; வசிட்டரைக் கண்டு களித்த கண்களால், துஷ்ட மிருகங்களைக் கண்டு கலங்குவான்; அரசாள வேண்டியவன் விசாரத்திலே வேதனையிலே மூழ்குவான் என்று தெரிந்திருந்தும். கை : காடு ஏகத்தான் வேண்டும் என்று கூறினேன். இரா : இராமன் காடு ஏகுவான் என்ற நிலை வந்ததும், அயோத்தியிவே இருந்தவர்கள் எப்படியானார்கள்? கை : சொல்ல முடியாத அளவிற்குக் கஷ்டப்பட்டார்கள். [கம்பரைப் பார்க்கிறாள்.]