பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிதேவன் மயக்கம் 31 இரா : கம்பர், அதுபற்றி விவரமாகப் பாடி இருக்கிறாரே, என்கிறீரா? நான் அவருடைய கவிதை சிலவற்றிலிருந்து குறிப்பு வாசிக்கிறேன். அவை உண்மையா என்று பாரும்; முடியுமானால் கூறும்.. ஓலையைப் புரட்டிக் கொண்டே அயோத்தியா காண்டம்; நகர் நீங்கு படலத்திலே, ஊரார் துயரைக் கம்பர் உள்ளம் உருகும் முறையிலே இருபது பாடல்களுக்கு மேல் வர்ணித்திருக்கிறார். இராமன் காடு செல்வான்' என்ற சொல் காதிலே வீழ்ந்ததோ, இல்லையோ - அரசரும் அந்தணரும், மற்ற மாந்தரும் தசரதனைப் போலவே துயருற்றுக் கீழே சாய்ந்தார்களாம்... புண்ணிலே நெருப்பு பட்டது போலிருந்ததாம் அந்தச் செய்தி. மாதர்கள், கூந்தல் அவிழப் புரண்டு அழுதனராம் அடியற்ற மரமெனக் கீழே வீழ்ந்தனராம்! அம்மே, கைகேயி' என்று கம்பர் பாடுகிறார். "கிள்ளையோடு பூவையழுத கிளர்மாடத் துள்ளுறையும் பூசையழுத வுருவறியாப் பிள்ளையழுத பெரியோரை யென்சொல்ல வள்ளல் வனம்புகுவா னென்றுரைத்த மாற்றத்தால்', வள்ளலாம் இராமன் வனம் புகுவான் என்ற வார்த்தையைக் கேட்ட அளவிலே, கிளியும் நாகணவாய்ப் பட்சியும், வீடுகளிலே வசிக்கும் பூனைகளும், உருவத்தை அறியாத சிறு குழந்தைகளும் அழுதன என்றால், பெரியவர்கள் அழுதது பற்றி என்னவென்று சொல்வது என்று கம்ப்ர் பாடியிருக்கிறார். கம்பரே! தங்கள் பாட்டுக்கு நான் கூறிய பொருள் சரிதானே? கம் : உண்மையே! இராகவன் காடு செல்கிறான் என்று கேள்விப் பட்டவுடன் பட்சிகளும் பூனைகளும்