பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 அறிஞர் அண்ணா குழந்தைகளும் கூட அழுதன என்று பாடினதுண்டு. ஏன், இன்னொரு பாடலும் உண்டே.. "ஆவுமழுதவன் கன்றழுதவன் றலர்ந்த பூவுமழுத புனற்புள்ளழுத கள்ளொழுகுங் காவுமழுத களிறழுத கால்வயப்போர் மாவுமழுதன வம்மன்னவனை மானவே என்றும் பாடியிருக்கிறேன். நீதி : இராவணன் கூறினதை விட, இந்தப் பாடல் கொஞ்சம் கடினம்! இரா : எளிதாக்கி விடலாம் நீதிதேவனே! 'ஆவும் அழுத அதன் கன்று அழுத, அன்று அலர்ந்த பூவும் அழுத, புனல் புள் அழுத கள் ஒழுகும் காவும் அழுத, களிறு அழுத, கால்வயப்போர் மாவும் அழுத, அம்மன்னவனை மானவே" -இதுதான் கவிதை ஆவும், காவும்,மாவும், களிறும், இப்படிப் பலவற்றைக் கவி சந்திக்கச் செய்ததாலே கொஞ்சம் சிரமமாக ஆகி விட்டது கவிதை! அழுத என்பது இடையிடையே அடிக்கடி வருகிறது, ஒரே பொருள் உணர்த்த கவிதையின் பொருள் இதுதான் அந்தத் தசரத மன்னவனைப் போலவே பசு, அதன் கன்று, அன்று மலர்ந்த புஷ்பம், நீரிலே வாழும் பறவைகள், தேன் பொழியும் சோலை, தேரில் பூட்டப்படும் வலிவுள்ள குதிரைகள் இவை யாவும் அழுதன என்கிறார் கவி! - நீதி :ஏது, இராவணனே! கம்பரின் கவிதைகளை நுட்பமாக ஆராய்ந்திருக்கிறீரே! இரா : எதிர்க்கட்சி வக்கீலாயிற்றே கம்பர்! அவருடைய வாய்மொழியிலுள்ளவைகளைக் கவனித்து தானே என் குற்றமற்ற தன்மையை நிரூபிக்க வேண்டும்? நீதி : சரி! இராமன் வனம் புகுவது வேட்டு அயோத்தி ஒரே அழுகுரல் மயமாகி விட்டது. அதனால்...