பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிதேவன் மயக்கம் 33 இரா:(கைகேயியைப் பார்த்து) ஏனம்மா கைகேயி! இராமன் காடு. போகிறான் என்பதைக் கேட்டு பூனையும், யானையும், குதிரையும், குழந்தையும்,பூவும்,காவும், கிளியும், நாகணவாய்ப் பட்சியும் மனம் உருகி அழுதனவாமே அந்த நேரத்திலும் தங்கள் மனம் இளகவில்லையோ? கை இல்லை.... இரா : ஊரார் ஏசினர் நீதிதேவா! ஒரு மன்னரின் மனைவியைச் சொல்லத்தகாத மொழியினால் கூட ஏசினர். கொடியவளே! கொலைகாரி!' என்று தசரதன் ஏசினார்.ஊரார் என்ன சொன்னார்களாம் தெரியுமோ? கம்பரே கூறலாமோ? கம்: எந்தப் பாடலைச் சொல்லப் போகிறீர்? 7 இரா: நீர் பாடியதைத்தான்! நான் என்ன கவியா, சொந்தமாக பாட! 'கணிகை காண் கைகேசி' என்று ஊரார் பேசினராம்! [கைகேயி கோபமாகப் பார்க்க ] அம்மே! அரக்கனாம் என் மொழி அல்ல இது. அயோத்யா காண்டம்,நகர் நீங்கு படலம் 109ம் பாடல்... கம் : கணிகை காண் கைகேசி என்றால் விலைமகள் என்று பொருள். நான் அப்படிப் பாடவில்லை. கொஞ்சம் இடைச் செருகல் புகுந்து விட்டது. நான் பாடினது 'கணிகை நாண் கைகேசி' என்றுதான்... இரா : பாட்டு பழுது பார்க்கப்பட்ட பிறகு பொருள் முன்பு இருந்ததை விட மோசமாகி விட்டது கம்பரே!... முன்பாவது கைகேயியை வேசி என்று கூறினீர்! இப்போது வேசையரும் கண்டு வெட்கப்படுவர், கைகேயியின் கெட்ட குணத்தைக் கண்டால் என்றல்லவோ பொருள்?. கம்: வேறு விதமாகத்தான் இருக்க வேண்டும். நிதானமாக யோசித்தால்தான் முடியும். கைகேயியை நான் கணிகை என்று கூற முடியுமா? நீ.3.