பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 அறிஞர் அண்ணர் எந்தச் சிங்காரியையாவது தேவரும் மூவரும் விட்டிருப்பாரா? கூறுங்கள்! இரக்கம் இல்லை என்று குற்றம் சாற்றினது அக்ரமம்! அதற்காக இலங்கையை அழித்தது அநீதி என் வேலை தீர்ந்தது. இனி நீதியின் வேலை நடக்கட்டும்.. [நீதிதேவன் திடீரென்று மயங்கிக் கீழே சாய்கிறான். ஜூரிகள் எழுந்து நிற்கிறார்கள். நீதிதேவனுக்கு மயக்கம் தெளிந்த பிறகு தீர்ப்பு என்று கோர்ட் சேவகர் தெரிவிக்கிறார்.அது நெடுநாளைக்குப் பிறகுதானே. சாத்தியம்' என்று கூறிக் கொண்டே இராவணன் போய்விட கோர்ட் கலைகிறது. கம்பர் அவசரத்திலே கால் இடறிக் கீழே வீழ்கிறார்.] இடம் : தவச்சாலை காட்சி - 5 இருப்: சம்புகன், இராமன், சம்புகன் தாய். நிலைமை :[தவச்சாலையில் சம்புகன், தவம் செய்து கொண்டிருந்தான். சாந்தி தவழும் அவன் முகம், காண்போரை வசீகரப் படுத்தக் கூடியதாக இருக்கிறது.] தேவனின் திருப்பெயர்களைக் கூறித் துதிக்கிறான். இராமன் அங்கு வருகிறான். முகத்திலே கோபக்குறியுடன். சம்புகனின் தவம், இராமனின் அதிகாரக் குரலால் கலைகிறது. சீற்றத்துடன், பேசுகிறான் மன்னன் காரணம் புரியாதவனாகிக் குழம்புகிறான். சம்புகன். மன்னரின் கோபம், ஏதன் பொருட்டு என்பதை அறிந்ததும் சம்புகனுக்குச் சிரிப்பு உண்டாகிறது.