பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிதேவன் மயக்கம் 39 சம்புகனின் தாயாருக்கு விஷயம் தெரிவிக்கப்பட்டது -உன் மகன் தலையை யாரோ வெட்டி விட்டனர். என்று! ஐயோ, மகனே! என்று அண்டமதிரக் கூவினாள் அன்னை. ஓடோடி வந்தாள் தவச்சாலைக்கு, தரையில் உருண்டு கிடந்த தலையைக் கண்டாள். மீண்டும் கண் திறந்தாள். தலையைக் கையிலே எடுத்தாள் துடித்தாள் பெருங்குரலில் கூவி அழுதாள் பெற்றவள், வேறென்ன செய்வாள்? எடுத்துக் கொண்டாள் தலையை துடி எதிர்ப்பட்டோரை எல்லாம், கேட்கலுற்றாள், யார் செய்தது இக்கொடுஞ்செயலை என்று. ச.தாயார் : மகனே! இந்தக் கதியா உனக்கு? யார் செய்த சதியடா இது? எந்தப் பாதகன், எந்தப் பாவி இந்தக் காரியத்தைச் செய்தான்? கண் மூடிக் கைகூப்பிக் கடவுளைத் தொழுது கொண்டிருந்த என் மகனை, கத்தி கொண்டு, கழுத்தை வெட்டிய காதகன் யார்? மகனே! மகேசனைக் காண வேண்டும், அவன் அருளைப் பெற வேண்டும், அதற்கான ஞான மார்க்கத்தை நாட வேண்டும், என்று ஏதேதோ கூறினாயே. இந்தக் கதிக்கு ஆளானாயே! ஈவு இரக்கமற்ற இந்தச் செயலைச் செய்தவன் யார்? இலங்கையிலே இருந்து, தப்பி ஓடி வந்த அரக்கன் எவனாவது செய்திருப்பானோ இந்தக் காரியத்தை! மகனே! அருமை மகனே! வெட்டுண்ட உன் தலையை, நான் எப்படியடா கண்டு சகிப்பேன். தவம் செய்கிறேன், தவம் செய்கிறேன் என்று கூறித் தேகத்தைப் பாழாக்கிக் கொள்கிறாயே, காணும் போதே பெற்ற மனம் எரிகிறதே, போதுமடா லகள் யிசர்