பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிதேவன் மயக்கம் 41 தலையைப் பறிகொடுத்த தனயனின், தாய் நான்! இந்த அநீதி, நடந்திருக்கிறது. அடவியில் அல்ல, அயோத்தியில்! களத்திலே அல்ல, தவத் தலத்திலேயே நடந்திருக்கிறது. மகனே! கடவுளை உள்ளன்போடு எண்ணும்போது, கசிந்து கண்ணீர் மல்கும் என்று சொல்வாயே! இது, என்னடா மகனே! எனதருமை மகனே! - இரத்தமடா, இரத்தம், பெற்ற மனம் சும்மா இருக்குமாடா, மகனே! எந்தப் பேயன் செய்தான் இந்தக் காரியம் - அவனைக் காட்டுங்கள். சிரம் இருபது இருப்பினும், என் இருகரம் போதும், இரக்கமற்ற பேயன் யார்? யார்? அவன் யார்? எங்கே? எங்கே இருக்கிறான்?. சீக்கிரம் அழைத்துச் செல்லுங்கள் விநாடியே என் உயிர் இருக்கும் அவனைக் காண வேண்டும் கண்ணீரைக் காண வேண்டும். இன்னும் சில அதற்குள் நான் அவன் என் இதோ - இரத்தம் மகனுடைய இரத்தம், தாயின் கரத்தில் ஈவு இரக்கமற்ற இந்தக் கொலைகாரனைக் காட்டுங்கள், அவன் உடலிலே, இந்த இரத்தத்தைப் பூசுகிறேன். அதுபோதும், அவன் உயிர் போக இராமன் அவ்வழி வர] - யார்? இராமனா! இராமன் அறிவானா, இதனை இராமா! உன் ஆட்சியிலே, மகனின் வெட்டுண்ட தலை, தாயின் கையிலே! தவசியின் தலை சிலையா, நீ சீற்றம் பிறக்கவில்லையா? கண் திறந்துதானே இருக்கிறது- இதோ, என் மகன் தலை மாபாவி யாரோ, கொன்றுவிட்டான் - பிடி - நீட்டு கரத்தை -