பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிதேவன் மயக்கம் காட்சி - 6 43 இடம்: தேவலோகம் அறமன்றம். இருப்போர் : நீதிதேவன், இராவணன், கம்பன், அறநெறி கூறுவோ.. [இராவணன் கெம்பீரமாக உலவிக் கொண்டு பேசுகிறான். நீதிதேவனின் முகத்திலே பயமும் சோகமும் நன்றாகப் படிந்திருந்தது. கம்பர் அறநெறி கூறுவோரைப் பார்த்துப் புன்னகை புரிகிறார். அவர்களின் முகத்திலேயும் கவலைக் குறிகள் காணப்படுகின்றன. இரா : தேவா பேசிய சாட்சிகள் - இங்கு வந்து பேசாத சாட்சிகளை விடக் குறைந்த அளவுதான் எண்ணிக்கையில். நான் மேலும் சாட்சிகளை அழைக்கப் போவதில்லை. கம்: [ எழுந்து நின்று நீதிதேவனுக்கு மரியாதை தெரிவித்து விட்டு) உண்மைக்குச் சாட்சி தேவையில்லை வைரத்துக்கு பளபளப்புத் தரவேண்டியதில்லை அமிர்தத்துக்கு இனிப்புக் கூட்டத் தேவையில்லை அழகுக்கு அலங்காரம் தேவையில்லை - இரா: [கேலியாக] பாம்பின் பல்லுக்கு விஷம் தேவையில்லை ஏராளம் அதனிடமே. நீதி : கம்பரே! உவமைப் பூங்காவில் உலாவ நேரம் இல்லை. என்ன உரைக்க எண்ணுகிறீர்? கம் : நான் என் வாதத்துக்குத் துணை தேட, சாட்சிகளை அழைக்கப் போவதில்லை, உண்மையின் உருவத்தைத் தெளிவுப்படுத்த, நீதிதேவனின் திருச்சபையிலே அவசியமில்லை - தங்கள் திருப்பார்வைக்கு, உண்மை ஏற்கனவே நன்கு தெரிந்தே இருக்குமாகையால், நீதி : அதாவது சாட்சி இல்லை.