பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 அறிஞர் அண்ணா கரட்சி - 7 இடம்: வால்மீகி ஆசிரமம் இருப்: துரோணர், வால்மீகி நிலைமை : வால்மீகி அமர்ந்து ஓலைச் சுவடிகளைப் படித்துக் கொண்டிருக்கிறார். துரோணர் அப்போது அங்கு வருகிறார். துரோ : நமோ நமக! நமோ நமக! கலா வால் : நமோநமக! நமோநமக! வாருங்கள்! துரோணாச் சாரியார் அவர்களே! வாருங்கள். சகல வல்லவராகிய தாங்கள், இந்த ஆஸ்ரமத்துக்கு விஜயம் செய்ததால், நான் பாக்கியவானானேன். துரோ : நீங்கள் பாக்கியசாலிதான். ஆனால்.... வால்: என்ன முனிவரே! விசாரம்! துரோ : விசாரம், வேதனை, விதண்டாவாதம் இவை அனைத்தும், முனிவர்களாகிய எங்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறதே. தங்களுக்குத் தெரியாதோ? வால்: ஏன், என்ன நடந்தது, முனிவரே! துரோ: இராவணன் இரக்கமில்லா அரக்கன் என்று குற்றம் சாட்டி புகார் மனு ஒன்றை ஆண்டவன் இடத்திலே கம்பர் கொடுத்தார். வால் : ஆண்டவன் என்ன செய்தார்? துரோ : என்ன செய்வார்? இராவணனிடத்தில் ஏற்கெனவே ஆண்டவனுக்கிருந்த கோபத்தில், நீதிதேவனை அழைத்து விசாரணை செய்யக் கட்டளை இட்டார். வால்: வாதப் பிரதிவாதங்கள் பலமாக இருக்குமே! துரோ: இராவணனைக் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தி அவன் பெருமையைக் குலைத்து விடலாம் என்று, கனவு கண்டார் கம்பர்