பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிதேவன் மயக்கம் வால்: கனவு பலித்ததோ? 47 துரோ : கனவாவது, பலிப்பதாவது! இராவணனுடைய வாதங்களுக்கு பதில் கூற முடியாமல் தவிக்கிறார் கம்பர். வால் வினாசகாலே விபரீதபுத்தி கம்பருக்கு ஏன் இந்த வம்பு. மூலத்தைத் திரித்துக் கூறி புகார் மனு கொடுத்தால், விசாரணையின் போது இராவணன் அழிந்து படுவான் என்று கம்பர் எண்ணினார், போலும். துரோ: புகார் மனு கொடுத்த கம்பர் புழுபோலத் துடிக்கிறார். இராவணனின் மறுப்புரைகளைக் கேட்டு விசாரணை வேண்டும் என்று கூறிய கம்பர், இப்பொழுது விசாரத்தில் மூழ்கிக் கிடக்கிறார். பூலோகத்திலும், தேவலோகத்திலும் விசாரணைப் பற்றியே பேச்சாக இருக்கிறது. முனிவரே! {கம்பர் வருகிறார்] வால்: வாரும் கம்பரே, வாரும்! என்ன விசாரத்துடன் காணப்படுகிறீர் இராவணன் மீது நீர் கூறிய குற்றச்சாட்டுக்கு, மறு விசாரணை நடப்பதாகக் கேள்விப்பட்டேனே! உண்மைதானா? கம்: உண்மைதான் முனிவரே! வால்: எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது, விசாரணை? 'கம் : இராவணன், தான் செய்த குற்றங்களை வாதிட்டு மறுக்கிறான். அப்பழுக்கற்ற - ஆதாரங்களை அள்ளி. அள்ளி வீக்கிறான். உவமைகளைக் காட்டுகிறான். உடல் சில்லிட்டுப் போகிறது. வாதங்கள் பல புரிகிறான். ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. கவிச் சக்கரவர்த்தி நான், கலங்கி விடுகிறேன், அவன் வாதத்தைக் கேட்டு... முனிபுங்கவரே! இதற்கு நான் என் செய்வது? வால்: உமக்கு வேண்டும் ஓய்! நான் எழுதியதைத் திரித்து எழுதியதால் அல்லவோ இந்த அவஸ்தை உமக்கு.