பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 அறிஞர் அண்ணா வால் : அதுதான் தவறு என்கிறேன், நான். மூலத்தை மாற்றுகின்ற அதிகாரம் உமக்கேதையா? இராமாயணத்தை சிருஷ்டித்த வால்மீகி நானிருக்க அதைத் தமிழாக்கம் செய்ய முற்பட்ட நீங்கள் மூலத்தையே மாற்றி விட்டீரே! அதனால் அல்லவே இவ்வளவு தொல்லை 'உமக்கு! துரோ : அதுமட்டுமா முனிவரே! இராவணன் கம்பரை இழித்தும் பழித்தும் கூறுகிறான். அது, வாதி பிரதிவாதி சண்டை என்று விட்டு விடலாம்.ஆனால் முப்பது முக்கோடி தேவர்களையுமல்லவா அவன் வம்புக்கு இழுக்கிறான்! வால் : தேவர்கள் மீது களங்கம் ஏற்படும் வண்ணம் இராவணன் நீதிமன்றத்தில் வாதிட்டு வெல்வதை நினைத்தால். துரோ: கம்பராலல்லவோ தேவலோகத்துக்கு, இப்படிப்பட்ட களங்கம் ஏற்பட்டு விட்டது என்று நினைக்கத் தோன்றுகிறது. வால் : கம்பரே! நீர் கொடுத்த புகார்கள் விசாரணையின் போது உங்களுக்கே தீமையாய் வந்து முடியப் போகிறது. பொறுத்திருந்து பாருங்கள். கம் மாமுனிவரே! கவிச்சக்கரவர்த்தி என்று உலகம் என்னைப் புகழ்கிறது. அது இந்த இராவணனுக்குத் தெரியவில்லை. அவனோ என்னை வாதிட்டுக் கொல்கிறான்.நீரோ, என்னை நையாண்டி செய்து கொல்கிறீர்.ஊம்- நான் வருகிறேன். [காட்சி முடிவு] [கம்பர் போகிறார்]